பெண் புலிக்காக இரு சகோதர புலிகள் மிகவும் ஆக்ரோஷமாக சண்டையிட்ட காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
பெண்ணுக்காக மனிதர்களிடையே சண்டையென்பது மன்னர்கள் ஆட்சிகாலத்திலிருந்து இருந்துவரும் சம்பவமாக இருக்கும் நிலையில், விலங்குகளிடமும் இதுபோன்ற சம்பவம் உள்ளது என்ற தகவல் அவ்வப்போது வெளியாகிதான் வருகிறது. இப்போது ஒரு பெண் புலிக்காக இரு சகோதர புலிகள் மிகவும் ஆக்ரோஷமாக சண்டையிட்ட காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
ராஜஸ்தான் மாநிலத்தில் ரான்தாம்போர் தேசிய உயிரியல் பூங்கா செயல்பட்டு வருகிறது.
இங்கு ஏராளமான புலிகள் பாதுகாக்கப்படுகின்றன. அங்குள்ள நூர் என்ற பெண் புலிக்காக சின்சு, ராக்கி என்ற இரு சகோதர புலிகள் சண்டையிடும் காட்சிகள் வெளியாகியுள்ளது. நூருடன் சகோதர புலியொன்று நெருக்கமாக இருந்துள்ளது, அதனை பார்த்த மற்றொரு ஆண் புலி சண்டையிடுகிறது. ஒருவரை மாற்றி ஒருவர் கொடூரமான முறையில் ஆக்ரோஷமாக தாக்கிக்கொள்கிறது. இதுதொடர்பான வீடியோவை வனத்துறை அதிகாரி பர்வீன் கஸ்வான் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ பலரது விருப்பங்களைபெற்று வருகிறது.
கஸ்வான் தனது டுவிட்டர் பதிவில், ‘புலிகளுக்குள் சண்டை நடந்தால் அது இவ்வாறுதான் இருக்கும். வன்முறை காட்சிகளை நீங்களே பாருங்கள். இங்கு சகோதர புலிகள் பெண்புலிக்காக ஆக்ரோஷத்துடன் சண்டையிடுகின்றன’ என்று குறிப்பிட்டுள்ளார். நல்லவேளையாக இந்த சண்டையில் ராக்கிக்கும் சின்சுவுக்கும் பெரிய காயம் ஏதும் ஏற்படவில்லை எனக் கூறப்படுகிறது.
Discussion about this post