கோவை மாநகராட்சியில் 2017ஆம் ஆண்டைக் காட்டிலும் 2018ஆம் ஆண்டில் குற்றங்களின் எண்ணிக்கை கூடியுள்ளது.
கோயம்புத்தூரில் சொத்து தகராறு வழக்குகள், கொலை வழக்குகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் கடந்த ஒரு ஆண்டில் முந்தைய ஆண்டைக் காட்டிலும் கணிசமான அளவு அதிகரித்துள்ளதாகக் கோவை மாநகரக் காவல் துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து மாநகரக் காவல் ஆணையர் சுமித் சரண் வெளியிட்டுள்ள பத்திரிகை அறிவிப்பில், “கோவையில் சொத்து வழக்குகள் தொடர்பாக 720 வழக்குகள் பதிவாகியுள்ளன. இது 2017ஆம் ஆண்டில் 646 வழக்குகளாக மட்டுமேயிருந்தது. இதில் 3.39 கோடி ரூபாய் மதிப்பிலான 513 சொத்துகளுக்கான வழக்குகள் முடிந்துள்ளன.
2018ஆம் ஆண்டில் கோவை மாநகராட்சியில் 29 கொலைகள் நடந்துள்ளது. ஆனால் 2017ஆம் ஆண்டில் 21 கொலைகள் மட்டுமே நடந்திருந்தது. பெரும்பாலான கொலைகளில் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். இதுவரையில் இந்த கொலைகள் தொடர்பாக 28 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பெரும்பாலான கொலைகள் முன்கூட்டியே கும்பல்களால் திட்டமிட்டு நடத்தப்பட்டவையல்ல. அதேபோல கொலை முயற்சிகளும் 18லிருந்து 26ஆக அதிகரித்துள்ளன.
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 44லிருந்து 46ஆக அதிகரித்துள்ளது. சமூக விரோதிகளைக் கட்டுப்படுத்துவதற்கான பணிகளை நாங்கள் தீவிரமாகத் தொடங்கியுள்ளோம்” என்று தெரிவித்துள்ளார். அதேபோல 2018ஆம் ஆண்டில் கோவையில் 140 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால் 2013ஆம் ஆண்டில் 73 பேர் மீது மட்டுமே குண்டர் தடுப்புச் சட்டம் பதிவு செய்யப்பட்டிருந்தது.
Discussion about this post