எத்தனையாவது முறை என்றே தெரியாத அளவுக்கு, விஷாலின் திருமணம் குறித்த தகவல் மீண்டும் வெளியாகியிருக்கிறது. 2019 ஏப்ரலுக்குப் பிறகு எப்போது வேண்டுமானாலும் இருக்கலாம் என்கிறது டைம்ஸ் ஆஃப் இந்தியா.
விஷாலுக்குத் திருமணம் என்ற தகவலை அவருக்கு ஆதரவானவர்கள் வெளியிடுகிறார்களா, எதிரானவர்கள் வெளியிடுகிறார்களா என்பது முக்கியமல்ல. அவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், விஷாலுக்குத் திருமணம் செய்துவைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றனர். சமீபத்தில் ஏற்பட்ட பிரச்சினைகளின் பின் அந்த முடிவு வேகப்பட்டிருக்கிறது.
ஆனால், என்னவானாலும் விஷால் திருமணத்துக்கு சம்மதிக்க முடியாமல் தடுப்பது தயாரிப்பாளர்கள் சங்க கட்டிடத்தின் வேலைகள் தான். சங்கக் கட்டிடத்தில் வரும் மண்டபத்தில் தான் தனது திருமணம் என விஷால் வாக்கு கொடுத்திருப்பதால், விஷாலின் திருமண அறிவிப்பைவிட, சங்கக் கட்டிடத்தின் வேலை முடிந்துவிட்டதாக செய்தி வெளியானாலே, விஷாலின் திருமணம் குறித்த தகவலை உறுதிபடுத்திவிடலாம்.
Discussion about this post