சொந்த வாழ்வில் ஆணவக் கொலையால் பாதிப்புற்ற கௌசல்யா நீதிக்காக நடத்திய போராட்டத்தையும், ஆணவக் கொலைகளுக்கு எதிரான இயக்கத்தில் அவர் வகித்த பங்கையும் சமூக நீதி ஆற்றல்களோடு சேர்ந்து நாமும் வரவேற்றோம். சங்கர் மீதான காதலையே நினைத்துக்கொண்டு கௌசல்யா காலமெல்லாம் கைம்பெண்ணாகவே வாழ வேண்டும் என்ற பத்தாம்பசலி நிலைப்பாட்டிலும் எமக்கு உடன்பாடில்லை.
அவர் மீண்டும் காதல் மணம் புரிவது வரவேற்கத்தக்கது என்ற கருத்திலும் மாறுபாடில்லை. ஆனால் சக்தி மீது கொண்ட காதலும், அவரை மணந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கமும் கருதி சக்தியின் செயலைக் கண்டிக்கத் தவறியது கௌசல்யாவின் பிழையாகும் என கௌசல்யா மீதான புகார்கள் குறித்து தியாகு கொளத்தூர் மணி ஆகியோர் விசாரணை நடத்தி அறிக்கை கொடுத்துள்ளனர். இது குறித்து கௌசல்யா கூறியிருப்பதாவது:
தோழர் தியாகு, தோழர் கொளத்தூர் மணி ஆகியோரின் அறிக்கையில் என் மீது சொல்லப்பட்ட பிழையை மட்டுமே நான் ஏற்கிறேன். மற்ற அவதூறுகளை மறுக்கிறேன். 6 மாத கருக்கலைப்பு என்பதும் அதற்கு நான்தான் காரணம் என்பதும் ஏற்றுக்கொள்ள முடியாத விடயம். அதில் உண்மையும் இல்லை. இது தலைவர்களுக்கு நன்கு தெரியும்.
என்னுடைய பிழை என்பது, சக்திக்கு முன்பு சில காதல்கள் இருந்திருக்கிறது; சில போக்குகள் இருந்திருக்கிறது;தெரிந்தே நான் விரும்பியதும், திருமணம் செய்துகொண்டதும் மட்டும்தான். இந்த அடிப்படையில் நான் செய்தது பிழை என்று அறிக்கையில் கூறியிருப்பதை ஏற்றுக்கொள்கிறேன்.
நானும் சக்தியும் கருக்கலைப்புக்கு பொறுப்பு அல்ல என்பதை மீண்டும் அழுத்தமாகக் குறிப்பிட விரும்புகிறேன்.
இவ்வாறு கௌசல்யா கூறியுள்ளார்.
Discussion about this post