விஸ்வாசம் படத்தின் கதை குறித்து செய்தி கசிந்திருக்கிறது. தேனியின் பெரிய தாதாவாக இருப்பவர் அஜித். அவர் யாரிடமும் வம்புக்கு போகாத நபர். ஆனால், தானாக வரும் எந்த வம்பை விடாதவர். அவர் மனைவியின் பிரசவ நேரத்தில் அவரால் அருகில் இருக்க முடியவில்லை. தவிர்க்க முடியாத ஒரு சண்டையில் சிக்குகிறார். சண்டைக்கு வந்தவர்களை அடித்துத் துவைக்கிறார். பின், கால தாமதமாக, மனைவி சேர்க்கப்பட்டிருக்கும் மருத்துவமனைக்கு ஓடோடி வருகிறார். ஒருக்கட்டத்தில் மனைவி நயன்தாரா, அஜித்திடம் இருந்து பிரிந்து சென்று விடுகிறார்.
பனிரெண்டு ஆண்டுகள் கழித்து, மும்பையில் இருக்கும் தன்னுடைய மனைவி நயன்தாராவை சந்திக்கிறார். சந்தோஷத்தில் திளைக்கிறார் அஜித். விளையாட்டில் படு சுட்டியாக இருக்கும் அஜித்தின் மகள், ஒரு போட்டியில் கலந்து கொள்கிறார். அப்போது, அந்தப் போட்டியில் எதிர் போட்டியாளராக வந்து நிற்கிறார், அஜித்துக்கு வில்லனாக இருக்கும் நபரின் மகள். இந்த சமயத்தில்தான், வில்லன் ஒரு கணக்குப் போடுகிறார்.
அஜித்தின் மகளை கொன்றுவிட்டால், தன்னுடைய மகள் போட்டியில் கட்டாயம் வெற்றி பெற்று விடுவாள் என்று நினைத்து, அஜித் மகளை கொல்ல திட்டம் போடுகிறார். சதியோடு களம் இறங்குகிறார் வில்லன். அஜித்துக்கு அந்த விஷயம் தெரிய வருகிறது. வில்லனின் சதி திட்டத்தை முறியடித்து, மகளின் உயிரைக் காப்பாற்றுவதோடு, போட்டியிலும் மகளை வெல்ல வைக்கிறார். இத்துடன் விவசாயம் சம்பந்தமான விஷயங்களையும் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள் இதுதான், ‘விஸ்வாசம்’ கதை என்கின்றனர்.
Discussion about this post