சீனாவில் ஆப்பிள் ஐபோன் வாங்குவதற்காக சிறுநீரகத்தை விற்ற சிறுவன் தற்போது உயிருக்குப் போராடி வருகிறான். 2011 ஆம் ஆண்டு ஐபோன் 4 ஐ வாங்க வேண்டும் என்று ஏங்கிய வாங் என்ற சிறுவன், பெற்றோருக்கு தெரியாமல் தனது ஒரு சிறுநீரகத்தை 3200 டாலருக்கு விற்பனை செய்துள்ளான்.
ஆனால் அறுவை சிகிச்சை முறையாக செய்யாததால், காயம் ஆறாமல் நோய் தொற்று ஏற்பட்டு மற்றொரு சிறுநீரகத்தையும் பாதித்து விட்டது. இதனால் தற்போது படுக்கையிலேயே வாழ்க்கையை நகர்த்தி வரும் வாங்கிற்கு, தினமும் டயாலிசஸ் சிகிச்சை அளிக்கப்படுகிறது. கிட்னியை விற்றது குறித்து தாமதமாக அறிந்த அவனது பெற்றோரும் மருத்துவ செலவை சமாளிக்க முடியாமல் திணறி வருகின்றனர்.
Discussion about this post