“திருவாரூர் நிலவரம் இப்படி என்றால், சென்னையில் கதை வேறு மாதிரியாக இருக்கிறது. திருவாரூர் தேர்தல் நடப்பதில் திமுகவுக்கு ஆர்வம் இல்லை என்கிறார்கள். சுப்ரீம் கோர்ட்டில் திருவாரூர் தேர்தலை நடத்தக் கூடாது என இரண்டு வழக்குகள் போடப்பட்டிருக்கிறது. இரண்டின் பின்னணியிலும் திமுக இருப்பதாகச் சொல்கிறார்கள்.
ஒரு வழக்கு சி.பி.ஐ. கட்சி போட்டிருக்கும் வழக்கு. இந்த வழக்கில் வழக்கறிஞர் கபில் சிபில் ஆஜராகிறார். இன்னொரு வழக்கு விவசாயச் சங்கத்தின் சார்பில் போடப்பட்டது. இதற்கு சல்மான் குர்ஷித் ஆஜராகிறார். இந்த இரண்டு வழக்கறிஞர்களுக்குமே குறைந்த பீஸே 50 லட்சம். அந்த பீஸை கொடுத்து வழக்கறிஞர்களை ஏற்பாடு செய்து கொடுத்ததே திமுகதான் என்று சொல்கிறார்கள்.
‘இப்போ திருவாரூருக்கு தேர்தல் நடத்தினால் நிச்சயம் செலவு பெருசா இருக்கும். அதிமுகவுக்கு இணையாக நாமும் செலவு பண்ணியாகணும். அப்படியும் ஒருவேளை தோற்றுவிட்டால் அது நமக்குப் பெரிய இழப்பாகிடும். அதனால நாடாளுமன்றத்துடன் இந்தத் தேர்தலைச் சந்திப்பதுதான் சரியாக இருக்கும்…’ என திமுகவின் முக்கிய நிர்வாகிகள் சிலரே சொல்ல ஆரம்பித்துள்ளனர்.
இதற்கிடையில் ஸ்டாலினைத் தொடர்பு கொண்டு பேசிய முன்னாள் அமைச்சர் நேரு, ‘திருவாரூரில் நீங்களே போட்டியிடுவதுதான் சரியாக இருக்கும். நீங்க போட்டியிட்டால் தமிழ்நாடு முழுவதிலிருந்தும் கட்சிக்காரங்க வந்து வேலை பார்ப்பாங்க.
நாம ஜெயிக்கிறதும் ஈசியா இருக்கும்..’ என்று சொல்லியிருக்கிறார். ஆனால் ஸ்டாலின் அதை மறுத்துவிட்டாராம். ‘அதெல்லாம் வேண்டாம். உச்ச நீதிமன்றத்தில் தேர்தலுக்குத் தடை வரும். பிறகு பார்க்கலாம்…’ எனச் சொல்லிவிட்டாராம்.”
Discussion about this post