பாகிஸ்தானுக்காக நான்கு அதிநவீன போர் கப்பல்களை சீனா தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பாகிஸ்தானுக்கு பல்வேறு ஆயுதங்களை சீனா வழங்கி வருகிறது. இந்நிலையில், இந்திய பெருங்கடல் பகுதியில் தனது ஆற்றலை உறுதிப்படுத்த முடிவு செய்துள்ள சீனா, ஆயுத ஒப்பந்தத்தின் ஒரு பாகமாக அதன் கூட்டாளி நாடான பாகிஸ்தானுக்கு நான்கு அதி நவீன போர் கப்பல்களை தயாரித்து கொடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நவீன போர் கப்பல்களில், நவீன ஜிபிஎஸ் மற்றும் ஆயுதம் கொண்ட அமைப்புகள், நீர்மூழ்கி கப்பல் மற்றும் விமான பாதுகாப்பு நடவடிக்கை அமைப்புகள் இடம் பெற்று இருக்கும் என்றும், இது ஷாங்காயில் உள்ள ஹூடாங்-சோங்குவா துறைமுகத்தில் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
Discussion about this post