இந்தி திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஜாக்கி ஷெராப். தமிழில் கூட இவர் மாயவன், ஆரன்ய காண்டம் ஆகிய படங்களில் நடித்திருப்பார். இவர் மகன் டைகர் ஷெராப். இந்தி திரையுலகின் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர். இவர் நடிப்பில் வெளியான பாகி, பாகி 2 ஆகிய படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்றவை.
டைகர் ஷெராப் சண்டை காட்சிகளுக்கும் பெயர் பெற்றவர். அதிலும் உடற்பயிற்சி மூலம் கட்டான உடற்கட்டை கொண்டிருப்பவர். அதுமட்டும் இன்றி அவ்வப்போது தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு ரசிகைகளின் ஆசையை தூண்டுபவர். மேலும் ஜிம்மில் தான் செய்யும் உடற்பயிற்சி வீடியோக்களையும் டைகர் ஷெராப் வெளியிடுவது வழக்கம்.
ஷெராப்பின் இந்த போட்டோ, மற்றும் வீடியோக்களுக்கு அதிக அளவில் ரசிகைகள் உண்டு. இந்த நிலையில் இந்த வீடியோ மற்றும் புகைப்படங்களை பார்க்க பிரபல நடிகை ஒருவர் வெறி கொண்டு சுத்தி வருவது தற்போது தெரியவந்துள்ளது. அந்த நடிகை வேறு யாரும் இல்லை. அவர் தான் சோனம் கபூர். பிரபல நடிகர் அனில் கபூரின் மகள்.
தனுஷ் இந்தியில் நடித்த ராஞ்சனா படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருப்பார் சோனம் கபூர். நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சோனம் கபூரிடம் எந்த பிரபலத்தில் சமூக வலைதள பக்கங்களை பின்தொடர்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு சற்றும் யோசிக்காமல் டைகர் ஷெராப்பின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை தான் பின்தொடர தனக்கு பிடித்திருப்பதாக கூறினார்.
ஏன் என்று நிகழ்ச்சி தொகுப்பாளர் கேட்ட போது, அந்த பையன் டிரெஸ் இல்லாமல் போடும் புகைப்படங்கள் செம்மையாக இருக்கும். அது மட்டும் இல்லாமல் அவன் உடற்பயிற்சி வீடியோவும் செம செக்சியாக இருக்கும் என்று பதில் அளித்துள்ளார் சோனம். மேலும் தொடர்ந்து டைகர் ஷெராப்பை டிரஸ் இல்லாமல் பார்ப்பதற்கு அவனை இன்ஸ்டாகிராமில் பின்தொடர்வதாகவும் சோனம் கூறியுள்ளார்.
Discussion about this post