நரேஷ் சம்பத் இயக்கும் இந்தப் படத்தில் ஆஷிமா நர்வால் கதாநாயகியாக நடிக்கிறார். டிசம்பர் மாதம் ஆரவ், ஓவியா இணைந்து நடித்த பாடல் காட்சியின் படப்பிடிப்பு நடைபெற்றது. எனவே ஓவியாவுக்கு முக்கிய கதாபாத்திரம் வழங்கப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அந்தவகையில் இதில் நடிகை ஓவியாவாகவே அவர் நடிக்கிறார்.
பிதாமகன் படத்தில் சிம்ரன் – சூர்யா இணைந்து ஆடியது போல் ஓவியாவின் ரசிகரான ஆரவ் அவரைத் திரையரங்கில் வைத்துச் சந்திக்கிறார். அதைத் தொடர்ந்து வரும் பாடலுக்குத் தான் இருவரும் நடனமாடுகின்றனர்.
அந்தப் பாடல் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஓவியா பயன்படுத்தி அதன் மூலம் பிரபலமான ‘சட் டப் பண்ணுங்க’, ‘கொக்கு நட்ட கொக்கு இட்ட முட்ட’, ‘ஸ்ப்ரே அடிச்சு போட்ருவேன்’ போன்ற வார்த்தைகளைக் கொண்டு உருவாகியுள்ளது. பாடல் காட்சியைத் தவிர இருவரும் வசனம் பேசி நடிக்கும் காட்சிகளும் உள்ளன. அக்காட்சியின் படப்பிடிப்பு பொள்ளாச்சியில் விரைவில் தொடங்க உள்ளது.
சைமன் கே கிங்க் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். கருந்தேள் ராஜேஷ் திரைக்கதை மற்றும் வசனம் எழுதியுள்ளார். மதன் கார்க்கி பாடல்களை எழுத, சுரபி ஃபிலிம்ஸ் சார்பாக எஸ். மோகன் இதைத் தயாரிக்கிறார்
Discussion about this post