உ.பி. மாநிலம் நொய்டாவைச் சேர்ந்த அமித் குப்தா , தகவல்அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு விண்ணப்பித்து தகவல் கேட்டார். அதில் கடந்த 2004-2017-ம் ஆண்டுகளில் ஜாதி, மத மோதல் மற்றும் பல்வேறு வன்முறை சம்பவங்களில் பலியானோர் விவரம் குறித்த பட்டியலை கேட்டிருந்தார். அதற்கு வந்த பதிலில், 2004-2017-ம்ஆண்டுகளில் 10,399 வன்முறை சம்பவங்கள் நடந்துள்ளன. இதில் 1,605 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 30,723 பேர் காயமடைந்துள்ளனர். அதிகபட்சமாக 2008-ம் ஆண்டில் 167 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 2,354 பேர் காயமடைந்துள்ளனர். 953 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. குறைந்தபட்சமாக 2011-ம் ஆண்டில் 91 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 1,899 பேர் காயமடைந்துள்ளனர். 580 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. இவ்வாறு அந்த பதிலில் கூறப்பட்டுள்ளது.
Discussion about this post