காதி துறையில் உற்பத்தியும் விற்பனையும் கடந்த மூன்றாண்டுகளாகவே சிறப்பான வளர்ச்சி கண்டுவருகிறது. உற்பத்தியைப் பொறுத்தவரையில், 2015-16ஆம் ஆண்டில் 34,490.22 கோடி மதிப்புக்குக் காதி பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. அதைத் தொடர்ந்த 2016-17ஆம் ஆண்டில் 42,631.09 கோடி மதிப்புக்கும், 2017-18ஆம் ஆண்டில் 48,081.41 கோடி மதிப்புக்கும் காதி பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. விற்பனையைப் பொறுத்தவரையில், 2015-16ஆம் ஆண்டில் 41,894.56 கோடிக்கும், 2016-17ஆம் ஆண்டில் 52,138.21 கோடிக்கும், 2017-18ஆம் ஆண்டில் 59,182.43 கோடிக்கும் காதி பொருட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
காதி மற்றும் கிராமப்புறத் தொழில் கழகம் சார்பாக கணிசமான அளவில் வேலைவாய்ப்புகளும் உருவாக்கப்பட்டு வருகின்றன. 2016-17ஆம் ஆண்டில் 1.37 கோடிப் பேருக்கும், 2016-17ஆம் ஆண்டில் 1.36 கோடிப் பேருக்கும், 2017-18ஆம் ஆண்டில் 1.40 கோடிப் பேருக்கும் இதன்மூலம் வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. 2017-18ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட வேலைவாய்ப்புகளில் அதிகபட்சமாக, தமிழகத்தில் மட்டும் 19.23 லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். அதைத் தொடர்ந்து உத்தரப் பிரதேசத்தில் 19 லட்சம் பேருக்கும், மேற்குவங்க மாநிலத்தில் 10.72 லட்சம் பேருக்கும், ராஜஸ்தானில், 10.67 லட்சம் பேருக்கும், மகாராஷ்டிராவில் 10.15 லட்சம் பேருக்கும், கர்நாடகாவில் 6.47 லட்சம் பேருக்கும் வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது.
Discussion about this post