அஜித் நடித்துள்ள படத்துடன் ரஜினி படம் நேரடியாக முதல் முறையாக மோத உள்ளது. அதன் காரணமாக பேட்ட-விஸ்வாசம் படங்கள் பற்றிய செய்திகள் தமக்கு வரவில்லை என்றாலும் தேடிப் பிடித்து முதன்மையான செய்திகளாக ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன.
விஸ்வாசம் படத்தின் அனைத்து ஏரியா உரிமைகளும் சுமார் 100 கோடி ரூபாய் அளவுக்கு வியாபாரம் நடைபெற்றுள்ளது. வெளிநாட்டு உரிமை 14 கோடி ரூபாய், தொலைக்காட்சி உரிமை 20 கோடி ரூபாய், செங்கல்பட்டு ஏரியா 12 கோடி ரூபாய், வட- தென்னாற்காடு 6.25 கோடி ரூபாய், திருநெல்வேலி ஏரியா 3 கோடி ரூபாய், மதுரை ஏரியா – 7.50 கோடி ரூபாய், கோவை ஏரியா 9 கோடி ரூபாய், சேலம் ஏரியா 4.75கோடி ரூபாய், கேரளா-கர்நாடகா உரிமைகள் 8 கோடி ரூபாய்க்கும் வியாபாரம் ஆகியுள்ளது.
விவேகம் படத்தில் ஏற்பட்ட நஷ்டத்தை சத்ய ஜோதி நிறுவனத்திடம் திருச்சி ஏரியா விநியோகஸ்தர் பல முறை கேட்டும் எந்த தீர்வும் கிடைக்காததால் திருச்சி ஏரியா வியாபாரம் முடியவில்லை. தற்போது விவேகம் படம் வாங்கிய விநியோகஸ்தருடன் விஸ்வாசம் தயாரிப்பாளர் சமரச உடன் பாடு ஏற்படுத்திக் கொண்டு திருச்சி ஏரியாவில் படத்தை திரையிட ஏற்பாடுகள் தொடங்கப்பட்டுள்ளது.
திருச்சி ஏரியா உரிமை 5 கோடி ரூபாய். இதில் விவேகம் படத்தில் ஏற்பட்ட 2 கோடி நஷ்டத் தொகையை குறைத்துக் கொண்டு எஞ்சியத் தொகையை சத்யஜோதி நிறுவனம் பெற்றுக் கொள்வது என முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
விவேகம் பட விநியோகஸ்தருடன் சத்யஜோதி நிறுவனம் சார்பாக சக்தி பிலிம் பேக்டரி இணைந்து படத்தை வெளியிடுவது என்ற உடன்படிக்கையில் திருச்சி ஏரியாவில் தியேட்டர்களை ஒப்பந்தம் செய்யும் வேலைகள் தொடங்கியுள்ளன.
.
Discussion about this post