தமிழகத்தில் நடைபெற இருக்கும் 18 சட்டப்பேரவை தொகுதிக்கான இடைத்தேர்தலிலும் மக்கள் நீதி மய்யம் போட்டியிடுகிறது.
மக்களவை தேர்தல் ஏப்ரம் மாதம் தொடங்கி மே மாதம் வரை ஏழு கட்டங்களாக நடைபெற இருக்கிறது. தமிழகத்தில் ஏப்ரல் 18 ஆம் தேதி மக்க ளவை தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலுடன் 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடத்தப்பட இருக்கிறது. இந்த மக்கள வைத் தேர்தலில் போட்டியில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் அதற்கான வேட்பாளர் நேர்காணலை நடத்தி வந்தது. வரும் 24 ஆம் தேதி கோவை கொடிசியா மைதானத்தில் வேட்பாளர் அறிமுக விழா நடைபெற இருக்கிறது.
இந்நிலையில், தமிழகத்தில் நடக்கும் 18 சட்டப்பேரவை இடைத்தேர்தலிலும் அந்தக் கட்சி போட்டியிட இருக்கிறது. போட்டியிட விரும்பும் கட்சி யினர் இதற்கான விருப்ப மனுக்களை இன்று முதல் பெறலாம் என்றும் மனுக்களை விண்ணப்பிக்க நாளை மறு நாள் கடைசி என்றும் அந்தக் கட்சித் தெரிவித்துள்ளது.
Discussion about this post