தமிழகத்தில் ஏப்ரல் 18-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ள சூழலில், 12-ஆம் தேதிக்குள் அனைத்து வகுப்புகளுக்கும் தேர்வுகளை முடிக்க பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக, அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக் கல்வித் துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில், 10,11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மார்ச் 29-ஆம் தேதியுடன் முடிவடையும் நிலையில், மற்ற வகுப்புகளுக்கும் மூன்றாம் பருவத் தேர்வுகளை ஏப்ரல் 12-ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மூன்றாம் பருவத் தேர்வுகளை ஏப்ரல் ஒன்றாம் தேதி தொடங்கி 12-ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்றும் அதற்கான கால அட்டவணையை அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களும், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்ப கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
Discussion about this post