முரசொலியில் வருவதற்கு காரணம் டாக்டர் கனிமொழி என்கிறார்கள். கனிமொழி என்றால் கலைஞரின் மகள் இல்லை. முன்னாள் அமைச்சர் என்.வி.என்.சோமுவின் மகள் டாக்டர் கனிமொழி. இவருக்குதான் பெரம்பூர் தொகுதியில் சீட் என ஆரம்பத்தில் இருந்தே சொல்லப்பட்ட நிலையில் கடைசி நேரத்தில் ஓ.எம்.ஜி. குரூப் தலையீட்டால் ஆர்.டி.சேகருக்கு அது ஒதுக்கப்பட்டது. வேட்பாளர் பட்டியல் வெளியான மறுநாள் காலை அறிவாலயத்துக்கு வந்திருக்கிறார் கனிமொழி சோமு. முகத்தில் அப்படியொரு கோபம் இருந்திருக்கிறது.
கையில் ஒரு கவரும் இருந்ததாம். நேராக தலைவர் ஸ்டாலின் அறைக்குப் போயிருக்கிறார் கனிமொழி. அங்கே ஸ்டாலின், துரைமுருகன், டி.ஆர்.பாலு உள்ளிட்ட சிலர் இருந்தார்களாம். நேராக ஸ்டாலினிடம் கொண்டு போய் கவரை நீட்டி இருக்கிறார் கனிமொழி. ‘ என்னம்மா தேர்தல் நிதியா?’ என கேட்டிருக்கிறார் ஸ்டாலின். பதில் எதுவும் பேசாமல் கடிதத்தை கொடுத்துவிட்டு அங்கிருந்து வந்துவிட்டாராம் கனிமொழி.
அந்த கடிதத்தை உடனே படித்தும் பார்த்திருக்கிறார் ஸ்டாலின். அதில், ‘திமுகவைத் தொடங்கிய ஐம்பெரும் தலைவர்களில் ஒருவர் என் தாத்தா என்.வி.நடராஜன். என் அப்பா என்.வி.என்.சோமு கட்சிக்காக எப்படி உழைத்தார் என்பது உங்களுக்கு நான் சொல்லி தெரிய வேண்டிய அவசியம் இல்லை. உங்களுக்கு தேவையான வாரிசுன்னா தலையில் தூக்கி வெச்சு கொண்டாடுவீங்க. நாங்க உங்களுக்கு கிள்ளுக்கீரைதானே… கேட்ட வாரிசுக்கு எல்லாம் சீட் கொடுத்து இருக்கீங்க. எனக்கும் கொடுக்க வேண்டியதுதானே. ஏற்கெனவே நான் இரண்டு முறை தோற்றதுக்கு காரணமே நம்ம கட்சி நிர்வாகிகள் தான். அவங்களை இப்போ மாவட்டச் செயலாளர்களாக்கி பக்கத்தில் வெச்சிருக்கீங்க. அதையெல்லாம் கேட்டால் தப்பாகிடும். நான் சந்தோஷமாக இல்லை. அதுக்கு காரணம் கட்சிதான்!’ என்ற ரீதியில் போகிறதாம் அந்த கடிதம்.
இந்த கடிதத்தை படித்த பிறகுதான், ‘இதுக்கு பதில் சொல்ற மாதிரி ஒரு கட்டுரை முரசொலியில் வரணும்’ என்று சொல்லி இருக்கிறார் ஸ்டாலின். அந்தக் கட்டுரைதான் மேலே நீங்கள் படித்தது.அதன் பிறகு அறிவாலயம் பக்கம் கனிமொழி வரவே இல்லையாம். இன்னும் அதிருப்தியாகத்தான் இருக்கிறாராம் கனிமொழி”
Discussion about this post