ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனத்தை மீட்டெடுப்பதற்காகப் பொதுமக்களின் பணத்தை மோடி தவறாகப் பயன்படுத்துவதாகக் காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
தனியார் துறை விமானப் போக்குவரத்துச் சேவை நிறுவனமான ஜெட் ஏர்வேஸ், கடுமையான வருவாய் இழப்பைச் சந்தித்து வருவதோடு பெருத்த கடன் சுமையில் சிக்கியுள்ளது. கடந்த சில மாதங்களாகவே உரிய நேரத்தில் ஊழியர்களுக்கு ஊதியம் கூட வழங்க இயலாமல் தடுமாறி வருவதோடு, செலவைக் குறைக்கும் விதமாகத் தனது ஊழியர்களில் சிலரைப் பணிநீக்கமும் செய்துள்ளது. ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் கடன் சுமையைக் குறைக்கும் விதமாக அதன் பங்குகளை விற்பனை செய்யும் முயற்சியில் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா உள்ளிட்ட வங்கிகள் கூட்டமைப்பு முன்வந்துள்ளது. இதன் பின்னணியில் நரேந்திர மோடி இருப்பதாகக் கூறப்படுகிறது.
காங்கிரஸ் கட்சியின் மூத்த செய்தித் தொடர்பாளரான ரன்தீப் சர்ஜுவாலா, டெல்லியில் இதுகுறித்து செய்தியாளர்களிடையே பேசுகையில், “ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனத்தின் பங்குகளைப் பங்கு ஒன்றுக்கு ரூ.1 என்ற வீதத்தில் மொத்தம் ரூ.8,500 கோடிக்கு வாங்க ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா உள்ளிட்ட வங்கிகளை மோடி பணித்துள்ளார். இவ்வாறு மக்கள் பணத்தைக் கொண்டு திவாலான ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை மீட்டெடுக்க மோடி அரசு முயல்கிறது.
Discussion about this post