சிவகார்த்தி நடிக்கவுள்ள புதிய படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கனா படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் ரவிக்குமார் இயக்கத்தில் சயின்ஸ் பிக்ஷன் திரைப்படம், ராஜேஷ் இயக்கத்தில் மிஸ்டர்.லோக்கல், பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் ஹீரோ ஆகியவற்றில் நடிக்கிறார். இந்தப் படங்களைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் முதன்முறையாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக ஏற்கெனவே செய்தி வெளியிட்டிருந்தோம். தற்போது இந்தத் தகவலை படக்குழு உறுதிசெய்துள்ளது.
சிவகார்த்திகேயனின் 17ஆவது திரைப்படமான இதை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இசையமைக்கவுள்ளார். இதற்கு முன் மான் கராத்தே, எதிர்நீச்சல், வேலைக்காரன் ஆகிய படங்களில் சிவகார்த்திகேயன், அனிருத் இணைந்து பணியாற்றியுள்ளனர்.
ஜூலை மாதம் இதன் படப்பிடிப்பு தொடங்கவுள்ள நிலையில் அடுத்த ஆண்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக யார் நடிக்கிறார்கள், மற்ற நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் குழு பற்றிய விவரங்கள் விரைவில் வெளியாக உள்ளன.
நடிப்பைத் தவிர கனா படத்தைத் தொடர்ந்து தயாரிப்பிலும் கவனம் செலுத்திவருகிறார் சிவகார்த்திகேயன்.
Discussion about this post