தமிழகத்தில் பழைய திரைப்படங்களை வெளியிடுவதில் ஒரு புதிய ட்ரெண்ட் உருவாகியுள்ளது. திரையரங்குகள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்ற பழைய படங்களை தேர்ந்தெடுத்து மீண்டும் திரையிட்டுவருகின்றன. இதில் விஜய், அஜித் படங்களுக்கென்று தனி மவுசு உண்டு. அண்மைக்காலமாக இவ்விருவரின் சூப்பர் ஹிட் படங்களை தேர்ந்தெடுத்து சென்னையில் சில திரையரங்குகள் திரையிட்டு வருகின்றன. விஜய், அஜித் மட்டுமல்லாமல் மற்ற சில நடிகர்களின் ஹிட் திரைப்படங்களை பார்க்கவும் கூட்டம் வருகின்றது.
அவ்வப்போது சிவாஜி கணேசனின் கர்ணன், எம்ஜிஆரின் ஆயிரத்தில் ஒருவன் போன்ற படங்களின் டிஜிட்டல் வெர்ஷன்களும் திரையிடப்படுகின்றன. இந்நிலையில், அமீர் இயக்கத்தில் கார்த்தி நடித்த பருத்திவீரன் திரைப்படம் இன்று (மார்ச் 22) முதல் சென்னையிலுள்ள சில திரையரங்குகளில் வெளியாகிறது. மாயாஜால், கோயம்பேடு ரோகிணி, காரப்பாக்கம் அரவிந்த், தாம்பரம் நேஷனல், பாடி லஷ்மிபாலா, அம்மையார்குப்பம் பாபு ஆகிய திரையரங்குகளில் பருத்தி வீரன் திரைப்படம் திரையிடப்படுகிறது.
பருத்தி வீரன் படம் 2007ஆம் ஆண்டில் வெளியானது. இப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான கார்த்தி தனது முதல் படத்திலேயே ரசிகர்களை கவர்ந்தார். இப்படத்தில் கதாநாயகியாக நடித்த பிரியாமணிக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருதும் கிடைத்தது. மேலும், ஆறு ஃபிலிம்ஃபேர் விருதுகளும், இரண்டு மாநில விருதுகளும் இப்படத்திற்கு கிடைத்தது.
Discussion about this post