அரசியலில் சொல்லை விட ’செயலுக்கு’ விஸ்வரூபமான வரவேற்பு எப்பவும் உண்டு. பொள்ளாச்சியின் வேட்பாளராக மீண்டும் களமிறங்கியிருக்கும் சி.மகேந்திரன் மக்களின் வரவேற்பு மழையில்தான் ஆனந்தமாய் நனைந்து கொண்டிருக்கிறார்.
’என்ன பாஸ் தேர்தல் நேரம்-ங்கிறதாலே ஓவர் பில்ட்-அப் கொடுக்குறீங்களா?’ என்று இதை விமர்சிக்க வழியே இல்லை. காரணம்?! எதிர்கட்சிக்காரர்களும் மறுக்கமுடியாத சாதனை பட்டியலுக்கு சொந்தக்காரர் மகேந்திரன். இதே பொள்ளாச்சி தொகுதியின் சிட்டிங் எம்.பி.யான இவர் இந்த ஐந்தாண்டு காலத்தினுள் பத்தில்லை, நூறில்லை…ஐந்தாயிரம் கோடி ரூபாயை தனது பொள்ளாச்சி தொகுதியின் வளர்ச்சிக்காக வாங்கிக் கொடுத்திருக்கிறார். கோயமுத்தூர் முதல் பொள்ளாச்சி வரையிலான குறுகியலான அந்த பழைய சாலை ஒரு காலத்தில் விபத்துகளின் சரணாலயமாய் இருந்தது. கொத்துக் கொத்தாய் உயிரிழப்பு ஏற்பட்டது.
ஆனால் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அணுசரனையில் மகேந்திரன் பெற்றுத் தந்த ஐநூறு கோடி ரூபாய் மூலம் இன்று ஏதோ விமான நிலைய ரன்வே போல் பிரமாண்டமாய் விரிந்திருக்கிறது அச்சாலை. விபத்தில்லாத அமைதிப்பூங்காவாக அது மாறியதற்கான முழு உழைப்பும் மகேந்திரனை சாரும். இந்த சாலை மட்டுமல்ல, மூவாயிரம் கோடி மதிப்பில் பொள்ளாச்சி – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை திட்டம் துவங்கப்பட்டு நடந்து கொண்டுள்ளது. வரலாறு பேசும் தமிழகத்தின் மிக முக்கியமான இந்த திட்டத்தின் உயிர்நாடியும் மகேந்திரன் தான். உயிரிழப்பை தடுக்கிறதை விட மிகப்பெரிய சேவை இந்த மண்ணுல வேறென்ன இருந்துட போகுதுங்க? அதை சாதிச்சுக் காட்டிட்டு, பவ்யமா நிற்கிறாரே!
ஆயிரம் கோயில்கள், அன்னதான மடங்களை கட்டுவதை விட நாலு பேருக்கு படிப்பு சொல்லிக் கொடுப்பதே பெரிய சேவை!ன்னு பெரியவங்க சொல்லுவாங்க. திருப்பூர் மாவட்ட மக்களின் பெரும் கனவான ‘கேந்திரிய வித்யாலயா’வை நிறைவேற்றிக் கொடுத்ததோடு, தன்னோட சொந்த நிலத்தை இனாமாக வழங்கிய பெரும் பெருமையும் மகேந்திரனையே சேருகிறது. இது மட்டுமில்லாமல் இந்த ஐந்து ஆண்டுகளில் உருவான சிறிய சாலைகள், பாலங்கள், தூர்வாரப்பட்ட குளங்கள், மேம்படுத்தப்பட்ட பள்ளிகள், ஏழைகளுக்கான இலவச ஆபரேஷன்கள்…அப்படின்னு அடுக்கிட்டே போகலாம்.
தொண்டாமுத்தூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, வால்பாறை, உடுமலைப்பேட்டை மற்றும் மடத்துக்குள் அப்படின்னு ஆறு சட்டசபை தொகுதிகளுக்கும் திட்டங்களை அள்ளிக் கொடுத்து, அதற்கு நிதிகளை பெற்று செயல்படுத்தியிருக்கிறதாலே மக்களின் மனங்களில் நிற்கிறார் மகேந்திரன். அதனால்தான் சிட்டிங் எம்.பி.யான இவருக்கு மீண்டும் வாய்ப்பு கொடுத்து மக்கள் சேவைக்காக அனுப்பியிருக்கிறது கழக தலைமை. கோவை, திருப்பூர் மாவட்ட அமைச்சர்களும், இரு மாவட்ட கழகத்தின் முக்கிய நிர்வாகிகளும் மகேந்திரனுக்கான மக்கள் செல்வாக்கை கண்டு அவரது தோளோடு தோள் நிற்பது, இந்த தொகுதியில் கழகத்தை நெஞ்சை நிமிர்த்தி நிற்க வைத்துள்ளது!
இவரை எதிர்த்து போட்டியிடும் பிரதான கட்சியான தி.மு.க.வின் வேட்பாளர் சண்முகசுந்தரம் தன் சொந்த கட்சியினரின் மனதிலிருந்தே வெகு தூரத்தில் இருக்கிறார். கடந்த 2009 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோற்ற இவர், அதன் பிறகு மக்கள் போராட்டம், கட்சி நிகழ்வுன்னு எதற்குமே தலைகாட்டியதில்லையே! யார் இவர்? பணமிருந்தால் சீட் கிடைக்கலாம், ஆனால் மக்கள் மனதில் இடம் கிடைக்குமா? என்று அவரை சொந்தக்கட்சிக்காரங்களே வறுத்தெடுக்கிறாங்க.
தி.மு.க. வேட்பாளர், அ.தி.மு.க. வேட்பாளரான மகேதிரனை பார்த்து பதறும் விஷயங்களில் மிக மிக முக்கியமானது அவரது ஐந்தாண்டு கால மக்கள் செயல்பாடுகள்தான். அது ஒன்றே பெரிதாய் பேசுகிறது! இப்ப சொல்லுங்க சொல்லை விட செயல்தானே பெரிது?!
Discussion about this post