வேலூர் தோட்டப்பாளையத்தில், தொழில் அதிபர் ஜி.ஜி.ரவியின் மகன்கள் சென்ற கார் மீது பெட்ரோல் நிரப்பிய பாட்டில்களை வீசி தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. ஜி.ஜி.ரவியின் மகன்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். 10 பேர் கொண்ட கும்பல் தாக்குதல் நடத்த முயற்சித்திருக்கிறது.
அவர்கள், கொடூரமாக கொலை செய்யப்பட்ட பிரபல ரவுடி மகாவின் கும்பலாக இருக்கலாம் என்று போலீஸ் சந்தேகிக்கிறது. மகா கொலைக்கு பழிக்குப் பழியாக கடந்த ஆண்டு ஜி.ஜி.ரவி கொலை செய்யப்பட்டார். இந்த நிலையில், அவரின் மகன்கள் மீது தாக்குதல் நடத்த முயற்சி நடந்திருப்பது, பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.*
Discussion about this post