கோவையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்ட 6 வயது சிறுமி விவகாரத்தில் அதிர்ச்சி தரும் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகியுள்ளது. கோவையில் வீட்டிற்கு வெளியே விளையாடிக்கொண்டிருந்த 6 வயது சிறுமி கடந்த திங்கட்கிழமையன்று மாயமாகியுள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் பொலிஸில் புகார் அளித்தனர்.
அதன்பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்ட போது கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் புதூர் என்ற இடம் அருகே சிறுமியின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. சிறுமியின் உடலை கைப்பற்றிய பொலிஸார், பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு பரிசோதனை மேற்கொண்ட மருத்துவர்கள், சிறுமி பல நாட்களாக பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யயப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில். வன்புணர்வு செய்வதற்காக சிறுமியின் வாய் மற்றும் மூக்கில் துணியை வைத்து அழுத்தியுள்ளனர். சிறுமியின் கழுத்தில் கயிறு போன்ற பொருளை வைத்து இறுக்கி வன்புணர்வு செய்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
FIR claims that the 7 year old child was sexually assaulted multiple times and murdered in Coimbatore..@CMOTamilNadu ???? pic.twitter.com/4p970Mfu6o
— Pramod Madhav (@madhavpramod1) March 28, 2019
இந்த சம்பவமானது தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், வழக்கினை போக்ஸோ சட்டத்திற்கு மாற்றியிருக்கும் போலீசார் தனிப்படை அமைத்து குற்றவாளியை தீவிரமாக தேடி வருகின்றனர்..
மேலும் சிறுமியின் சடலம் கண்டெடுக்கப்பட்ட பகுதியில் உள்ள செல்போன் சிக்கனல்களையும் ஆய்வு செய்து வருகின்றனர்.
இதற்கிடையில் சிறுமியின் பெற்றோர் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்திருப்பது தெரியவந்துள்ளது.
Discussion about this post