டிடிவி தினகரனின், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களுக்கும் ஒரே சின்னமாக பரிசுப்பெட்டி சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.
டிடிவி தினகரனின் கட்சியான அமமுக-விற்கு தொப்பி அல்லது குக்கர் சின்னத்தை ஒதுக்க வேண்டும் என்ற அக்கட்சியின் துணைப்பொதுச் செயலாளராக இருக்கும், டிடிவி தினகரன் கோரிக்கை வைத்தார். இந்நிலையில் உச்சநீதிமன்றம் அதை நிராகரித்துவிட்டது.
அந்த கட்சி துவங்கி இன்னும் பதிவு செய்யவில்லை எனவே, அமமுக வேட்பாளர்களை சுயேட்சையாக தான் கருத முடியும் என்றும், தேர்தல் ஆணையத்தின் விளக்கத்தை ஏற்று குக்கர் சின்னத்தை வழங்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.
இந்நிலையில் ஒரே பொது சின்னத்தை வழங்குமாறு பரிசீலிக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் அமுமுகவுக்கு பரிசுப் பெட்டி சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.
கடந்த ஆர்.கே நகர் சட்டமன்ற இடைதேர்தலில், குக்கர் சின்னம் வழங்கியது தேர்தல் ஆணையம். அதுமக்கள் பயன்படுத்தும் பொருள் என்பதால் அமமுக-வினர் எளிதில் மக்களிடம் கொண்டு சென்றனர்.
Discussion about this post