தளபதி விஜய் நடிப்பில் சர்கார் படம் தீபாவளிக்கு திரைக்கு வந்தது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் செம்ம வரவேற்பை பெற்றது
விஜய்க்கு தமிழகம் தாண்டி கேரளாவிலும் மிகப்பெரும் ரசிகர்கள் வட்டம் உள்ளது, அங்கு இந்த படம் முதல் நாள் மட்டுமே ரூ 5.8 கோடிகளுக்கு மேல் வசூல் செய்தது.
இது தான் கேரளாவில் இதுவரை வந்த படங்களில் முதல் நாள் அதிகம் வசூல் செய்த படமாக இருந்து வந்தது.
தற்போது இந்த சாதனையை மோகன்லால் நடித்த லூசிஃபர் உடைத்துள்ளது, இப்படம் எப்படியும் ரூ 6.5 கோடி வரை முதல் நாள் வசூல் வந்திருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
Discussion about this post