ஏப்ரல் 18 அன்று நடைபெறவிருக்கும் மக்களை தேர்தலுக்காக ,தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் தாறுமாறாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் ஆளும் கட்சி பாஜக மற்றும் பிற கட்சிகளுடன் சேர்ந்து அமைத்திருக்கும் கூட்டணிக்கு வலுவான எதிரணியாக அமைந்திருக்கிறது காங்கிரஸ் மற்றும் பிற கட்சிகளுடனா திமுகவின் மதச்சார்பற்ற ஜனநாயக கூட்டணி. இந்த தேர்தலில் தங்கள் பலத்தை நிரூபித்திட இரண்டு தரப்புமே வலுவாக போராடி வருகின்றன.
தொகுதி வாரியாக போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக அந்தந்த கட்சியை சேர்ந்த முக்கியத் தலைவர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் தஞ்சையில் போட்டியிடும் தமிழ் மாநில காங்கிரஸை சேர்ந்த அதிமுக கூட்டணி வேட்பாளர் என்.ஆர்,நடராஜனுக்கு ஆதரவாக , தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார்.
இந்த பிரச்சாரத்தின் போது வழக்கமாக பிரச்சாரத்திற்கு பயன்படுத்தப்படும் திறந்த வெளி வாகனத்தில், ஒரத்தநாடு பேருந்து நிலையம் அருகே வைத்து, அவரி எடப்பாடி பழனிச்சாமி பேசிக்கொண்டிருக்கையில் , அந்த வாகனத்தை குறிவைத்து செருப்பை யாரோ வீசிவிட, அது எடப்பாடியின் அருகில் இருந்த வேட்பாளர் நடராஜன் மீது விழுந்திருக்கிறது. இதனால் அப்பகுதியில் சிறிது பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்த சம்பவத்தில் செருப்படி வாங்கியது வேட்பாளர் நடராஜன் தான் என்றாலும், குறிவைத்து வீசப்பட்டது என்னவோ எடப்பாடி பக்கம் தான், என்று கூட்டத்தில் இருந்த சிலர் தெரிவித்திருக்கின்றனர் .
Discussion about this post