இலங்கையில் ஈஸ்டர் பண்டிகை நாளான கடந்த ஞாயிற்றுக்கிழமை, தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர விடுதிகள் நடத்தப்பட்ட தாக்குதலில் 350க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். அதேபோல், மேலும் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாக கூறப்பட்டு வருகிறது. அதனால், மக்கள் அச்சத்தில் வீடுகளை விட்டு வெளியே வராமல் உள்ளனர். இலங்கை முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் பொதுஇடங்களில் கூடவேண்டாமென்றும் அந்நாட்டு அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
இந்நிலையில் இலங்கை குண்டுவெடிப்பின் எதிரொலியாக தமிழகத்திலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சென்னை எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலையம், எழும்பூர் ரயில் தீவிர கண்காணிப்பில் உள்ளது. ரயில் நிலையங்களுக்கு வரும் பயணிகளும், அவர்களது உடமைகளும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன.
சோதனையில் வெடிகுண்டு நிபுணர்கள் மட்டுமின்றி காவல்துறையினரும், ரயில்வே போலீசாரும் ஈடுபட்டுள்ளனர். இலங்கை குண்டுவெடிப்புக்கு பின்னர் சென்னை விமான நிலையத்திலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.இந்த சமப்பவத்த மக்கள் எதிர்பார்த்த ஒன்று இப்ப சென்னையில் முக்கிய இடங்களில் திடீர் சோதனையால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்
Discussion about this post