சிலைக் கடத்தல் வழக்கு சிறப்பு அதிகாரியாக பொன் மாணிக்கவேல் நியமிக்கப்பட்டதற்கு எதிராக காவல்துறை அதிகாரிகள் உட்பட 66 பேர் தாக்கல் செய்திருந்த மனுவை உச்சநீதிமன்றம் இன்று தள்ளுபடி
சிலைக் கடத்தல் வழக்குகள் குறித்து ஐ.ஜி பொன் மாணிக்கவேல் தலைமையிலான சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்தி வந்த நிலையில், அதற்கு தமிழக அரசு தடை விதித்தது. மேலும் சிலை கடத்தல் தொடர்புடைய அனைத்து வழக்கு களையும் சிபிஐ விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது.
இதை டிராபிக் ராமசாமி, யானை ராஜேந்திரன் ஆகியோர் உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தனர். அதை விசாரித்த உயர்நீதிமன்றம், தமிழக அரசின் உத்தரவுக்கு தடை விதித்து, ஐ.ஜி பொன்.மாணிக்கவேலுக்கு கூடுதலாக ஒரு வருடம் பணி நீட்டிப்பு வழங்கி, அவரை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக நியமனம் செய்து உத்தரவிட்டது. இதனை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதை விசாரித்த உச்சநீதி மன்றம், சிலை கடத்தல் வழக்கை பொன் மாணிக்கவேல் தொடர்ந்து விசாரிக்கலாம் என்றும் விசாரணையை சிபிஐக்கு மாற்றிய தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்தும் உத்தரவிட்டது.
இந்நிலையில் பொன்.மாணிக்கவேல் நியமனத்துக்கு எதிராக அதிகாரிகள் உள்ளிட்ட 66 காவல்துறையினர் உச்சநீதிமன்றத் தில் மனுதாக்கல் செய்திருந்தனர். அதை, இன்று விசாரித்த உச்சநீதிமன்றம், அவர்களின் மனுவை தள்ளுபடி செய்து உத்தர விட்டது.
ஏற்கனவே, தமிழக அரசின் மனுவைத் தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம், இப்போது காவல்துறையினரின் மனுவையும் தள்ளுபடி செய்துள்ளது.
Discussion about this post