ஐ.பி.எல் தொடரில் அதிக முறை ஆட்டநாயகன் விருதை பெற்ற கிறிஸ் கெய்லின் சாதனையை டி வில்லியர்ஸ் நெருங்குகிறார்.
ஐ.பி.எல் தொடர்களில் கிறிஸ் கெய்லின் ஆட்டம் எப்போதும் அனல் பறக்கும் வண்ணம் இருக்கும். சிக்சர்களை விளாசி ரசிகர்களை குதூகலமாக்கும் வீரராக கெய்ல் உள்ளார். அதன் காரணமாகவே ‘யுனிவர் பாஸ்’ என்று செல்லமாக அழைக்கப்படுகிறார்.
அதேபோல் தான் ‘மிஸ்டர் 360’ என்று அழைக்கப்படும் ஏபி டி வில்லியர்ஸ், எந்த வகையிலும் கெய்லுக்கு சளைத்தவர் அல்ல. பஞ்சாப் அணிக்கு எதிரான கடந்த போட்டியில், டி வில்லியர்ஸ் 44 பந்துகளில் 7 சிக்சர்கள், 3 பவுண்டரிகளுடன் 82 ஓட்டங்கள் விளாசினார்.
அதே போட்டியில் எதிரணி வீரரான கெய்ல் 10 பந்துகளில் 23 ஓட்டங்கள் எடுத்தார். டி வில்லியர்ஸின் அதிரடியால் பெங்களூரு அணி வெற்றி பெற்றது. அத்துடன் அவருக்கு ஆட்ட நாயகன் விருதும் வழங்கப்பட்டது.
இது ஐ.பி.எல் தொடரில் டி வில்லியர்ஸின் 20வது ஆட்ட நாயகன் விருதாகும். ஒட்டுமொத்த ஐ.பி.எல் தொடரில் கிறிஸ் கெய்ல் 21 ஆட்ட நாயகன் விருதுகளைப் பெற்று முதல் இடத்தில் உள்ளார். அவரது சாதனையை சமன் செய்ய டி வில்லியர்ஸுக்கு இன்னும் ஒரு விருது தான் தேவை.
இவர்களுக்கு அடுத்தபடியாக ரோஹித் ஷர்மா, எம்.எஸ்.டோனி, டேவிட் வார்னர், யூசுப் பதான் ஆகியோர் தலா 16 ஆட்ட நாயகன் விருதுகளை பெற்றுள்ளனர்.
Discussion about this post