நடிப்பு கற்க வந்த கல்லூரி மாணவியை ஆடைகளை அவிழ்த்து நிர்வாணமாக நிற்க சொன்ன பிரபல நடிப்பு பயிற்சியாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் சூத்ரதார் நடிப்பு பயிற்சி மையத்தை கடந்த 20 ஆண்டுகளாக நடத்தி வந்தார் வினய் வர்மா.
இவர் தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில் 21 வயது கல்லூரி மாணவி ஒருவர் வினய் வர்மா மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
கடந்த 15ம் தேதி நான் வினய் வர்மாவின் நடிப்பு வகுப்புகளில் சேர்ந்தேன். 7 ஆண்கள், 2 பெண்கள் வகுப்பில் சேர்ந்தோம். வகுப்பின் கதவுகள், ஜன்னல்களை மூடிவிட்டு வினய் வர்மா எங்களை ஆடைகளை அவிழ்த்துவிட்டு நிர்வாணமாக நிற்குமாறு கூறினார் என்கிறார் அந்த மாணவி.
வினய் வர்மா கூறியதை அடுத்து 7 மாணவர்கள் ஆடையை அவிழ்த்தனர். அதை பார்த்த வினய் உள்ளாடையையும் கழற்றுமாறு கூறினார். ஆடையை அவிழ்க்காவிட்டால் வகுப்பில் இருந்து வெளியேறுமாறு வினய் தெரிவித்தார் என்று அந்த மாணவி போலிஸ் புகார் அளித்துள்ளார்.
இதனிடையில் நிர்வாணமாக நடிப்பது நடிப்பு பயிற்சியில் ஒரு பகுதி. மாணவ, மாணவிகளால் அப்படி நடிக்க முடியுமா என்பதை கண்டறியவே இப்படி ஒரு பயிற்சி என வினய் கூறினார்.
இந்நிலையில் போலிசார் வினயை கைது செய்த நிலையில் பின்னர் ஜாமீனில் விடுவித்தனர்.
Discussion about this post