இரண்டு நாட்களுக்கு முன்பு நடைபெற்ற ஐ.பி.எல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணியை வீழ்த்திய நிலையில், சென்னையில் எங்களை வீழ்த்த முடியுமா என்பது போல் ஹர்பஜன் சிங் சவால் விடுத்துள்ளார்.
சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடந்த ஐ.பி.எல் லீக் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தியது.
இந்தப் போட்டியில் ஹைதராபாத் அணியின் அதிரடி வீரர்களான பேர்ஸ்டோ, வார்னர் ஆகியோரின் விக்கெட்களை ஹர்பஜன் சிங் வீழ்த்தினர். சென்னை அணியின் வெற்றிக்கு இது முக்கிய காரணமாக அமைந்தது.
இந்நிலையில் சென்னை அணியின் வெற்றி குறித்து ஹர்பஜன் சிங் கூறுகையில், ‘களத்தில் இறங்குவது என்பதே மகிழ்ச்சி தருவது தான். எனக்கு உடல்நலம் குறைவு காரணமாக சில போட்டிகளில் ஆட முடியாமல் போனது துரதிர்ஷ்டம், எனக்கு மட்டுமல்ல என் குடும்பமே உடல்நலமின்மையால் தவித்தது.
ஆகவே மீண்டும் இறங்கி ஆடியது சந்தோஷமாக உள்ளது. அதிலும் வெற்றி கூடுதல் மகிழ்ச்சி தருகிறது. 19வது ஓவரிலேயே ஆட்டத்தை வென்றிருப்போம். ஆனால் சிறிது நேரம் எங்கள் இதயங்களை சோதித்தனர். எப்படியோ.. கடைசி ஓவர் ஆட்டத்தை எடுத்துச் செல்வது ஒரு மனப்பாங்கு ஆகிவிட்டது. முடிவு நமக்கு சாதமாக அமையும் வரை இது சரி.
ஷேன் வாட்சன் இந்த ஓட்டங்களை எடுத்தது நல்லது. அவர் ஒரு சீரியஸான வீரர். கடந்த ஆண்டு இறுதிப் போட்டியை அவர் தனிநபராக வென்று கொடுத்தார். இந்த இன்னிங்ஸ் அவரது நம்பிக்கையை அதிகரிக்கும். சென்னையில் அவர் எப்போதும் நன்றாக ஆடுவார். நாங்களும் சென்னையில் நன்றாகவே ஆடுவோம்.
இந்த பிட்சை நாங்கள் நன்றாக அறிவோம். அருமையான ரசிகர்களுக்கு நன்றி. சென்னைக்கு வந்து எங்களுக்கு எதிராக ஆடும் எதிரணியினர் எங்கள் வெல்ல வேண்டுமெனில், எங்களைக் காட்டிலும் சிறப்பான கிரிக்கெட் ஆட்டத்தை வெளிப்படுத்தினால் மட்டுமே முடியும், இல்லையெனில் கடினம்’ என தெரிவித்துள்ளார்.
Discussion about this post