பெங்களூரு அணிக்கெதிரான போட்டியின் போது தமிழக வீரர் அஸ்வின் கெட்ட வார்த்தையில் திட்டிய வீடியோ வைரலான நிலையில், அது குறித்து அவர் விளக்கமளித்துள்ளார்.
ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் கோஹ்லி தலைமையிலான பெங்களூரு அணியும், அஸ்வின் தலைமையிலான பஞ்சாப் அணியும் மோதின.
பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில் பெங்களூரு அணி 17 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இப்போட்டியில் கோஹ்லியை அவுட்டாக்கியவுடன் அஸ்வின் மிகவும் மோசமான வார்த்தையில் திட்டினார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், கோஹ்லியும் அவர் அடித்த பந்தை சிக்ஸர் லயனில் பிடித்தவுடன் பந்து சிக்ஸர் போகும் என்று நினைத்தாயோ என கிண்டல் செய்தார்.
இந்நிலையில் இது குறித்து அஸ்வின் கூறுகையில்,நானும் விராட் கோஹ்லியும் கிரிக்கெட்டை ரசித்து உணர்ச்சிகரமாக விளையாடி வருகிறோம். அதனால் இது போன்று நடப்பது இயல்பு தான், இதனை பெரிதுபடுத்த தேவை இல்லை என்று கூறியுள்ளார்.
Discussion about this post