உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நெருங்கும் வேளையில், தன்னுடைய முதுகுவலி குறித்து கவனம் கொள்ள வேண்டும் என்று டோனி தெரிவித்துள்ளார்.
தற்போது நடைபெற்று வரும் ஐ.பி.எல் தொடரில் சென்னை அணித்தலைவர் டோனி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அவரது தலைமையில் சென்னை அணி 11 போட்டிகளில் 8 வெற்றிகளை பெற்றுள்ளது.
மேலும் டோனி 10 போட்டிகளில் விளையாடி 314 ரன்களை குவித்துள்ளார். இரண்டு போட்டிகளில் களம் இறங்காமலேயே டோனி இத்தனை ரன்ளை விளாசியுள்ளார். முதுகுவலி காரணமாக ஒரு போட்டியில் விளையாடாத டோனி, பெங்களூரு அணிக்கு எதிராக 48 பந்துகளில் 84 ரன்கள் விளாசி அசத்தினார்.
இந்நிலையில் தன்னுடைய முதுகுவலி குறித்து டோனி கூறுகையில், ‘உலகக்கோப்பை நெருங்கும் வேளை. எனக்கு முதுகு வலி கொஞ்சம் இருக்கிறது. அது ஒன்றும் மோசமாக இல்லை. ஆனால் கவனித்துக் கொள்ளாமல் இருக்க முடியாது. ஏனெனில் அதுவும் முக்கியம்.
அப்படி எனக்கு முதுகு வலிப்பதாக தோன்றினால், கட்டாயம் கொஞ்சம் ஓய்வு எடுத்துக் கொள்வேன். ஆனால், தற்போதைய தருணத்தில் நீங்கள் கொஞ்சம் கவலையோடு சமாளிக்க வேண்டும்.
ஏனெனில், நீங்கள் முழு உடற்தகுதிக்காக காத்திருக்க வேண்டுமென்று நினைத்தால், ஒரு போட்டிக்கும் இன்னொரு போட்டிக்கும் நடுவில் 5 வருடம் இடைவெளி உருவாகிவிடும்’ என தெரிவித்துள்ளார்.
Discussion about this post