தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய் சேதுபதி நேற்று பிரபல தொகுப்பாளினி தியாவுடன் தனி விமானத்தில் சென்னையிலிருந்து மதுரைக்கு பயணித்துள்ளார்.
அப்போது அவருடன் எடுத்த புகைப்படத்தை தியா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார் .
நடிகர் விஜய் சேதுபதி தற்போது பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் மட்டுமல்லாமல் பல்வேறு சமூகம் சார்ந்த நிகழ்ச்சிகளிலும் அதிகமாக பங்கேற்று வருகிறார். நிலையில் சன் டிவியில் அவர் தொகுத்து வழங்கும் ‘நம்ம ஊரு ஹீரோ’ நிகழ்ச்சியும் தொலைக்காட்சி அன்பர்கள் இடையே மிகுந்த வரவேற்ப்பை பெற்றுள்ளது .இதனால் அவருக்கு அதிக பட வாய்ப்புகள் தேடிவந்த நிலையில் உள்ளன. நடிகர் விஜய் சேதுபதி மற்ற நடிகர்கள் போல இல்லாமல் பொது நிகழ்ச்சிகளில் அதிகம் கலந்துகொண்டும் வருகிறார்.
இன்று அவர் பிரபல தொகுப்பாளினி தியாவுடன் தனி விமானத்தில் சென்னையில் இருந்து மதுரைக்கு சென்றுள்ளார். அதற்கான காரணம் என்னவென்று பார்த்தால் ஒரு பிரபல நகைக்கடை திறப்பு விழாவுக்கு செல்ல விஜய் சேதுபதிக்கு இப்படி ஒரு ஏற்பாடு செய்துள்ளார்.
இன்று நடைபெற இருக்கும் தனியார் நகை கடை திறப்பு விழாவில் கலந்துகொள்ள சென்னையிலிருந்து மதுரைக்கு தனி விமானத்தில் பயணித்து உள்ளார் விஜய் சேதுபதி. விமானத்தில் செல்லும்போது அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட தொகுப்பாளினி தியா தனது ட்விட்டர் பக்கத்தில் இருவரின் புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார். இதைப் பார்த்த இணையதள ரசிகர்கள் பல்வேறு கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
Discussion about this post