17 வயது சிறுமியை கூட்டுப் பாலியல் பலாத்கார்ம் செய்த ஐந்து பேர் கும்பல் அதனை வீடியோவும் எடுத்த கொடூரம் அரங்கேறியுள்ளது.
முசாபர்நகரை அடுத்த புலலாட் கிராமத்தைச் சேர்ந்தவர் அந்த 17 வயது சிறுமி. வயலில் வேலை செய்து கொண்டிருந்த போது அந்தச் சிறுமியைக் கடத்திச் சென்ற 5 பேர் கொண்ட கும்பல் தனித்தனியாகவும் கூட்டாகவும் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது.
மேலும் அந்தக் கும்பல் தாங்கள் செய்த கொடூரத்தை வீடியோவாகவும் எடுத்து வைத்துக்கொண்டு சிறுமிக்கு மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. காயங்களுடன் வீட்டிற்குச் சென்ற சிறுமியைக் கண்டு குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.
அப்போது சிறுமி தனக்கு நேர்ந்ததை விவரித்தார். இதையடுத்து சிறுமியின் சகோதரர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனைத் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போலீசார் 3 பேரை கைது செய்தனர்.
இந்த நிலையில் தலைமறைவாக இருந்த இருவரை தேடிவந்தனர். இந்நிலையில் அந்த இருவரும் தற்போது பிடிபட்டுள்ளனர். முசாபர்நகர் பெண்கள் வாழ பாதுகாப்பற்ற நகரமாகிவிட்டதாக பெண்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இந்த நிலை தொடர்ந்த பெண்கள் மட்டும் இல்ல சின்ன சிறுமியர் கூட இந்த சூழலில் வாழ மாட்டார்
Discussion about this post