CSK கேப்டனாக 100 போட்டிகளில் தோனி வெற்றி பெற்றதற்காக சென்னை அணி நிர்வாகம் அவருக்கு யாரும் எதிர்பாராத வகையில் ஒரு நினைவு பரிசை அளித்துள்ளது.
தோனிக்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு உண்டு என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று. தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை மூன்று முறை ஐபிஎல் கோப்பையை வென்று சாதனை படைந்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் 11-ம் தேதி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தோனி CSK அணிக்கு வெற்றிதேடித் தந்தார். கேப்டனாக ஐபிஎல் போட்டிகளில் தோனிக்கு, இதுவே 100-வது வெற்றியாகும்.
இதனை கொண்டாடும் நோக்கில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாகம் சார்பாக அணி உரிமையாளர் ஸ்ரீனிவாசன் தோனிக்கு 100 விசில்கள் அடங்கிய ஒரு நினைவு பரிசை வழங்கி ஆச்சரியப்படுத்தியுள்ளார்.
இந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பக்கத்தில் பதிவிட்டுள்ள சாக்ஷி தோனி, “வாழ்த்துகள் தல, விசில்போடு, உங்களுக்காக 100 விசில்கள்” என்று மகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். விசில் பரிசை ஒட்டுமொத்த சென்னை ரசிகர்கள் தலையில் தூக்கி கொன்டுகிறரர்கள் அதுமட்டும் இல்லை இந்த 100 வெற்றிகளை தந்த நம்ம தல தோனிக்கு மீண்டும் ஒருமுறை விசில் போடு
Discussion about this post