ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் பதவியில் இருந்து ரஹானே அணி நிர்வாகம் நீக்கிய நிலையில், அவரை அவமரியாதை செய்துவிட்டதாக ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் பிராட் ஹாக் தெரிவித்துள்ளார்.
தற்போது நடைபெற்று ஐ.பி.எல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைவராக அஜிங்யா ரஹானே செயல்பட்டு வந்தார். ஆனால் அவரது தலைமையில் ராஜஸ்தான் அணி 8 போட்டிகளில் விளையாடி 2 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தது.
அதனைத் தொடர்ந்து, ரஹானேவுக்கு பதிலாக ஆஸ்திரேலிய வீரரான ஸ்டீவ் ஸ்மித் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இதனை இதுவரை யாரும் விமர்சிக்காத நிலையில், முன்னாள் அவுஸ்திரேலிய வீரர் பிராட் ஹாக் விமர்சித்துள்ளார்.
அவர், தனது நாட்டைச் சேர்ந்த முன்னணி வீரரான ஸ்டீவ் ஸ்மித் கேப்டனாக நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், ‘ரஹானே கேப்டனாக இருந்தபோது மற்ற வீரர்கள் பலரும் தாங்களாகவே முடிவெடுத்து பீல்டிங்கை மாற்றினர்.
பிற வீரர்களுக்கு கட்டளை இட்டனர். ரஹானே பந்துவீச்சாளர்களிடம் பேசும்போது, மற்ற வீரர்கள் அவர் அருகே வந்து நின்றனர். மற்ற வீரர்கள் கேப்டனிடம் இப்படி நடந்துகொண்டது சரியில்லை. ஒரு கேப்டன் என்றால் அவர் கேப்டன் தான். அவர் தான் முடிவெடுப்பார். வேறு யாருமல்ல.
ரஹானேவை நீக்கும் முடிவு கடினமானது. அவர்கள் அவருக்கு சற்றே அவமரியாதை செய்து விட்டனர். ராஜஸ்தான் அணியினர் ரஹானேவை சுதந்திரமாக செயல்பட விடவில்லை’ என தெரிவித்துள்ளார்.
ரஹானே கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்ட பிறகு, சதம் விளாசி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post