காஞ்சிபுரம் மாவட்டத்தில் 16 வயது சிறுமியை வீட்டு வேலைக்கு என்று அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்த நபர்களை போலிசார் தேடி வருகின்றனர்.
வேளாங்கண்ணி – அற்புதராஜ் ஆகியோர் 16 வயது சிறுமியை வேலைக்கு அழைத்து சென்றுள்ளனர். இந்நிலையில் ஈஸ்டர் பண்டிகைக்கு வீட்டுக்கு வந்த சிறுமி, இனிமேல் தான் வேலைக்கு செல்லமாட்டேன் என்றும் அங்கு தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.
சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் தலைமறைவாக உள்ள இரண்டு பேரையும் போலிசார் தேடி வருகின்றனர்.
வேலைக்கு அழைத்து சென்ற இடத்தில் தனக்கு போதை ஊசி செலுத்தி பாலியல் தொல்லை கொடுத்து அதனை வீடியோவாக பதிவு செய்தனர் என சிறுமி போலிசில் வாக்குமூலம் அளித்துள்ளார்.
வீடியோவை காட்டி மிரட்டி தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்ததாக பல திடுக்கிடும் தகவல்களை சிறுமி பொலிசில் தெரிவித்துள்ளார். தமிழ் நாட்டில் சட்டங்கள் தண்டனைகள் எவ்வளவு கடுமையாக இருந்தாலும் சரி இது போல மன்னிக்க முடியாத குற்றங்கள் தொடர்ந்து நடைப்பெற்று தான் வருகிறது , சமீப காலமாக தன் இது போன்ற சிறுமி பாலியல் வன்கொடுமை இந்தியாவை மிக அதிக அளவில் அதிகரித்து வருகிறது இது இப்படியே போனா நாடு என்ன ஆகப்போகிறதோ
Discussion about this post