நான்காம் கட்ட மக்களவைத் தேர்தலுக்கு பரப்புரை இன்று மாலையுடன் நிறைவடைகிறது.
மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக, ஏப்ரல் 11 ஆம் தேதி தொடங்கி, மே 6 ஆம் தேதி வரை நடைபெகிறது. கடந்த 11, 18 மற்றும் 13 தேதிகளில் மூன்று கட்டமாக, மொத்தம் 303 மக்களவை தொகுதிகளுக்கு தேர்தல் முடிவடைந்த நிலையில், நான்காம் கட்டத் தேர்தல் 9 மாநிலங்களில் உள்ள 71 தொகுதிகளுக்கு திங்கட்கிழமை நடைபெற உள்ளது.
மகாராஷ்ட்ராவில் 17 தொகுதிகள், ராஜஸ்தான், உத்தரப்பிரதேசத்தில் தலா 13 தொகுதிகள், மேற்கு வங்கத்தில் 8 தொகுதி கள், மத்தியப் பிரதேசம் மற்றும் ஒடிசாவில் தலா 6 தொகுதிகளுக்கு அன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதேபோன்று, பிகாரில் 5 தொகுதிகளுக்கும், ஜார்கண்ட்டில் 3 தொகுதிகளுக்கும், ஜம்மு- காஷ்மீரில் ஒரு தொகுதிக்கும் அன்றைய தினம் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
இதற்கான பரப்புரை இன்று மாலையுடன் நிறைவு பெறுகிறது. இதையடுத்து, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், வேட்பாளர்களும் இறுதிக்கட்ட பரப்புரைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். வாக்குப்பதிவுக்காகத் தேர்தல் ஆணையம் விரிவான ஏற்பாடுகளைச் செய்துள்ளது. இன்னும் மூன்று கட்டங்கள் நடந்து முடியும் வரை அரசியல் கட்சி தலைவர்கள் ஓய்வின்றி உழைப்பார்கள்
Discussion about this post