நடிகை ஸ்ருதிஹாசன் தனது பிரிட்டீஷ் காதலரை திடீரென பிரிந்துவிட்டார்.
நடிகை ஸ்ருதிஹாசன், பிரிட்டீஷ் நாடக நடிகர் மைக்கேல் கோர்சல் என்பவருடன் நட்பாக பழகினார். பின்னர் இருவரும் காதலிக்க தொடங்கினார்கள். சென்னையில் நடந்த ஆதவ் கண்ணதாசனின் திருமண விழாவில் இருவரும் கமல்ஹாச னுடன் கலந்துகொண்டதை அடுத்து இவர்கள் காதலிக்கும் தகவல் வைரலானது. இதையடுத்து மும்பை உள்ளிட்ட பல் வேறு பகுதிகளில் அவர்கள் ஒன்றாகச் சுற்றி வந்தனர். கடந்த 2 வருடத்துக்கும் மேலாகத் தொடர்ந்த இவர்கள் காதல் திடீரெ ன முறிந்துள்ளது.
விரைவில் திருமணம் செய்துகொள்வார்கள் என்று கூறப்பட்ட நிலையில், கடந்த 10 ஆம் தேதி நடிகை ஸ்ருதிஹாசன் தனது சமூக வலைத்தள பக்கத்தில், ”என் வாழ்க்கையில் மீண்டும் புதிய பாதை தொடங்குகிறது. ஆழமான இருண்ட இடத் தில்தான் ஒளி பிரகாசமாக வெளிப்படும். அதிக இசை, அதிகத் திரைப்படங்கள் என காத்திருக்கிறேன். என்னுடன் நான் இருப்பதே எப்போதும் சிறந்த காதல் கதையாக இருக்கிறது’’ என்று தெரிவித்தார்.
இதையடுத்து காதலனுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக, அவர்கள் பிரிந்துவிட்டதாக சினிமா வட்டாரத்தில் தகவல் பரவியது. ஆனால், இதுபற்றி ஸ்ருதி எதுவும் தெரிவிக்கவில்லை.
இந்நிலையில், ஸ்ருதியின் காதலர் மைக்கேலும் ட்விட்டரில், ”வாழ்க்கை நம்மை எதிரெதிர் துருவத்தில் வைத்துவிட்டது. அதனால் துரதிர்ஷ்டவசமாக தனித்தனிப் பாதையில் செல்ல வேண்டியிருக்கிறது. என்றாலும், அந்த இளம்பெண் எப்போ தும் என் சிறந்த தோழி. அவருக்கு நன்றி’’ என்று குறிப்பிட்டுள்ளார்.
இதன் மூலம் இருவரும் தங்கள் காதலை முறித்துள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது.
Discussion about this post