தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் புகார் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட நீதிபதி போப்தே தலைமையிலான 3 நபர் குழுவிலிருந்து நீதிபதி வி.என்.ரமணாவுக்கு புகாரளித்த பெண்ணிடமிருந்து எதிர்ப்புகள் கிளம்பியதையடுத்து, அவர் விசாரணை ஆணையத்திலிருந்து தாமாக விலகினார். இதையடுத்து பெண் நீதிபதி இந்து மல்கோத்ரா விசாரணை ஆணையத்தில் இணைக்கப்பட்டார்.
பணியிடங்களில் பெண்கள் மீதான பாலியல் புகார்கள் குறித்து விசாரிக்க அமைக்கப்படும் கமிட்டியில் அதிகபட்ச உறுப்பினர்கள் பெண்களாக இருக்க வேண்டும் என்ற விசாகா கமிட்டியின் பரிந்துரையை உச்ச நீதிமன்றமே இவ்வழக்கில் பின்பற்றத் தவறுவதாகப் புகாரளித்த பெண் உட்பட பலர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அதைக்கருத்தில் கொண்டு விசாரணை ஆணையத்தில் இந்திரா பானர்ஜிக்கு அடுத்து இந்து மல்கோத்ரா தற்போது இணைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த ஆணையத்தின் விசாரணை நேற்று (ஏப்ரல் 26) தொடங்கியது. 26ஆம் தொடங்கும் விசாரணையின்போது தலைமை நீதிபதி மீது புகாரளித்த பெண் நேரில் ஆஜராக வேண்டுமெனவும் ஏப்ரல் 23ஆம் தேதி நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது. இதையடுத்து நீதிபதிகள் போப்தே, இந்து மல்கோத்ரா மற்றும் இந்திரா பானர்ஜி அமர்வின் முன்பு நேற்று புகாரளித்த உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் பெண் ஊழியர் நேரில் ஆஜரானார். அவரிடம் முதல் விசாரணை நேற்று நடந்தது. விசாரணை ஆணையத்தின் முன்பு புகாரளித்த பெண் ஆஜரானபோது நீதிமன்ற பொதுச் செயலாளரும் உடனிருந்தார் என்று கூறப்படுகிறது.
Discussion about this post