இந்தியாவில் 7 கட்டங்களாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று வருகிறது. முதல் கட்டமாக ஏப்ரல் 11ஆம் தேதி மேற்கு வங்கம் உள்ளிட்ட பல மாநிலங்களில் தேர்தல் நடந்தது.
இந்நிலையில் அம்மாநிலத்தின் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் அன்சூரா என்ற பெண்ணின் கணவர், ஆளும் திரிணாமுல் காங்கிரஸின் தீவிர ஆதரவாளராக இருந்துள்ளார். இந்தநிலையில் தேர்தலன்று தன் மனைவியை திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்குமாறு கோரியுள்ளார். ஆனால், அவரது மனைவி மறுத்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அவரது கணவர், தனது மனைவியின் வாயில் ஆசிட் ஊற்றியுள்ளார். மேலும் அவரை அடித்து துன்புறுத்தியுள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட அன்சூரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் அன்சூராவின் மகன் சம்பவம் குறித்து காவல்துறையில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், தனது தாயை அடித்து வாயில் ஆசிட் ஊற்றி தன் தந்தை துன்புறுத்தியுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மனைவி தான் கூறிய கட்சிக்கு வாக்களிக்கவில்லை.. கணவன் செய்த கொடூர செயல்..! இந்தியாவில் 7 கட்டங்களாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று வருகிறது. முதல் கட்டமாக ஏப்ரல் 11ஆம் தேதி மேற்கு வங்கம் உள்ளிட்ட பல மாநிலங்களில் தேர்தல்
Discussion about this post