ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகிவரும் தர்பார் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தொடர்ந்து வெளியாகிவருகின்றன.
ரஜினிகாந்த் புதிய படத்தில் ஒப்பந்தமானால் அந்தப் படத்தின் தகவல்களை ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருப்பார்கள். படக்குழுவும் எந்தத் தகவலையும் முதலில் வெளியிடாமல் ரகசியம் காக்கும். குறிப்பிட்ட நாள்களுக்குப் பின் வெளியீட்டை மனதில்கொண்டு படம் பற்றிய தகவலை ஒவ்வொன்றாக வெளியிடுவார்கள். படத்தில் ரஜினிகாந்த்தின் தோற்றம் எப்படி இருக்கும் என்பதே பெரிய கேள்வியாக இருக்கும். ஆனால் தர்பார் படத்தில் படக்குழுவுக்கு ஆரம்பம்முதலே இணையவாசிகள் அதிர்ச்சியளித்து வருகின்றனர்.
படத்தின் டைட்டிலை படக்குழு வெளியிடுவதற்கு முன்னரே ரஜினிகாந்தின் தோற்றத்தை விளக்கும்படியான வீடியோ வெளியானது. அதில் காவல்துறை அதிகாரியாக ரஜினி நடிப்பது உறுதியான நிலையில் அவசர அவசரமாக படக்குழு ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை வெளியிட்டது.
சமீபத்தில் ரஜினிகாந்த், யோகி பாபு, நிவேதா தாமஸ் ஆகியோர் பங்குபெறும் காட்சியின் புகைப்படம் வெளியான நிலையில் தற்போது ரஜினிகாந்த் படப்பிடிப்பு தளத்தில் கிரிக்கெட் விளையாடும் புகைப்படம் வெளியாகியுள்ளது. இந்தக் காட்சியில் ரஜினியுடன் நயன்தாரா, யோகி பாபு, நிவேதா தாமஸ் ஆகியோர் உள்ளனர்.
அனிருத் இசையமைக்கும் இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது.
Discussion about this post