ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் கேட்ச் பிடித்தும், அது அவுட் என்று தெரியாமல் இருந்த அம்பத்தி ராயுடுவை சென்னை ரசிகர்கள் மோசமாக திட்டி வருகின்றனர்.
சென்னையில் நேற்று நடைபெற்ற போட்டியில் ரெய்ன தலைமையிலான சென்னை அணியும், ரோகித் தலைமையிலான மும்பை அணியும் மோதின, இப்போட்டியில் ரோகித் தலைமையிலான மும்பை அணி 46 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
சொந்த மண்ணில் சென்னை அணியை வீழ்த்திய மும்பை அணிக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
இந்நிலையில் இப்போட்டியில் டோனி இல்லாத சென்னை அணி எப்படி இருந்தது என்பதை பார்க்க முடிந்தது.
குறிப்பாக, ஆட்டத்தின் 5-வது ஓவரின் போது, லுயிஸ் எதிர் கொண்ட பந்தானது, அவரை ஏமாற்றி அம்பத்தி ராயுடுவிடம் சென்றது.
இதனால் விக்கெட் மிஸ் என்று நினைத்த போது, மீண்டும் ரீப்ளேவில் பந்தானது பேட்டில் பட்டது தெரிந்தது. இதைக் கண்ட இணையவாசிகள் பேட்டில் பட்டது கூடவா? தெரியவில்லை, இப்ப்போ தான் பா டோனிய ரெம்ப மிஸ் பண்றோம் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.
Discussion about this post