அதிக அளவில் டீ குடிப்பதினால் கபைன் நச்சுக்கள் டீ குடிப்பவரை அடிமையாக்கி விடும். இத்தகைய கபைன் நச்சுக்கள் சாதரணமானது இல்ல. அதன் பாதிப்பு பலவாக உள்ளது. கவனச்சிதறல், அமைதியின்மை, நிலையில்லா தன்மை, மற்றும் உறக்க பழக்கத்தில் மாற்றம் போன்றவை இந்த கபைன் நச்சுக்கள் மூலம் ஏற்ப்படுகிறது.
இதுமட்டுமில்லாமல் அதிக அளவு டீ குடிப்பதினால் கீமோதெரபி மருந்துகள் உள்ளிட்ட மருந்துகள் உடலில் சென்று வேலை செய்வதை தடுக்கும். இதனால் அந்த மருந்தால் நோயை குணப்படுத்த முடியாத நிலை ஏற்படும். மருந்துகள் வேலை செய்யாமல் இருப்பதற்கு ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது இந்த டீ குடிக்கும் பழக்கம்.
மேலும் இந்த டீ குடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் அவர்களின் பழக்கத்தை நிப்பாட்ட முடியாது அதனால் டீ குடிக்கும் அளவையாவது குறைத்து கொள்ளலாம். அதாவது சராசரியாக ஒரு நாளைக்கு 3 அல்லது 5 கப் டீ குடிப்பது சரியான அளவாகும். இதற்கு அதிகமாக டீ குடிப்பது அவரவரின் உடல்நிலையை பொறுத்து மாறுபடும்.
டீ குடிப்பவரா நீங்கள் கண்டிப்பாக அந்தப்பழக்கத்தை மாற்றுவது நல்லது.
Discussion about this post