இமயமலை அடிவாரத்தில் அமைந்துள்ளது மேகாலயா மாநிலம். ஈஸ்ட் காசி ஹில்ஸ் எனப்படும் கிழக்கு காசி மலைகள் எனப்படும் உலகின் ஈரப்பதமிக்க நகரமாகும். இந்தப்பகுதி சுற்றுலா பயணிகளின் முக்கிய தேர்வாக அமைந்துள்ளது. உள்நாட்டு ம்ற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து வரும் இடமாகதான் மேகாலயா மாநிலம் அமைந்துள்ளது.
2006 ஆம் ஆண்டில் 4,00,000 மாக இருந்த சுற்றுலா பயனிகளின் வருகை என்ணிக்கை கடந்த 2017 ஆம் ஆண்டில் 10,00,000 மாக அதிகரித்துள்ளது. சுமாராக அடுத்த 8 ஆண்டுகளில் மேகாலயாவிற்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
சுற்றுலா பயனிகளின் வருகையை ஊக்குவிக்க அம்மாநில அரசு கூடுதலான நிதி ஒதுக்கீடு மற்றும் பல்வேறு திட்ட்ங்களை செயல்ப்படுத்த தொடங்கியுள்ளது. மேலும் 40 சுற்றுலா தளங்களை தேர்வு செய்து அங்கு தங்குமிடம்,உணவகங்கள் போன்ற வசதிகளை அதிகரிக்க மேகாலயா மாநிலம் அரசு தீவிரம் காட்டி வருகிறது
.
ஈர்ப்பதமிக்க இந்த நகரின் எழில்மிக்க சூழலும்,ஏரிகளின் அழகும் படகு சவாரியும் சுற்றுலா பயனிகளை ஈர்க்கிறது. மலைகளும், ஏரிகளுமாக நிறைந்த இயற்க்கையான சூழல் மக்களை பெரிதும் கவர்கிறது. மேலும் விசித்திரமான குகைகள், ரப்பர் மரத்தின் வேர்களால் ஆனப் பாலம் என பலவற்றை கண்டுகளிக்கும் இடமாக மேகாலயா விளங்கிறது.
சொல்லும் போதெ தோன்றுகிறது இப்படி ஒரு இடத்தை பார்க்க வெண்டும் என்றும் மிஸ் பண்ணக்கூடாது என்றும்.
Discussion about this post