நம் முன்னோர்கள் வீட்டிலேயே வைத்தியம் பார்ப்பது மட்டும் இல்லாமல் ஆரோக்கியமான உணவுகளையும் எடுத்து கொண்டனர். வீட்டில் உள்ள சமையில் அறையில் இருக்கும் ஒவ்வொரு உணவு பொருட்களுக்கும் தனி மருத்துவ குணம் உண்டு. மருத்துவரை அணுகாமல் வீட்டிலேயே மருத்துவம் செய்த பாட்டி வைத்தியம் ஆயுளை அதிகரித்து நோயின்றி வாழ வழி செய்கிறது. அப்படிப்பட்ட வைத்தியங்கள் பற்றி காண்போம்.
பூண்டை உணவில் அதிக அளவில் சேர்த்து கொண்டால் பிபீ பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும். இரத்த அழுத்தம் சீராகும்.
வெள்ளரி,வெள்ளை வெங்காயம் இரண்டையும் சம அளவில் எடுத்து சாறு பிழிந்து குடித்து வந்தால் உடல் பருமன் மற்றும் ஊளைச்சதை குறையும்.
வெந்தயம், சுண்டைக்காய் வற்றல்,மிளகு ஆகியவை ஒவ்வொன்றிலும் 50 கிராம் எடுத்து வறுத்து பொடி செய்து வைத்து கொள்ளவும். இதனை வெறும் வயிற்றில் சாப்பிட உடல் எடை குறையும்.
வாழைத்தண்டு சாறு, பூசணிச்சாறு, அருகம்புல் சாறு மூன்றையும் சம அளவு எடுத்துக் கலந்து கொள்ளவும். இதனை ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடித்து வந்தால் உடல் எடை குறைந்து அழகிய தோற்றம் கிடைக்கும்.
வல்லாரை கீரை 3,சீரகம் 10 கிராம் அளவுக்கு எடுத்து பொடி செய்து வைத்து கொள்ளவும். இதனை இரவில் சாப்பிட்டு வந்தால் ரத்த அழுத்தம் சீராகும்.
வங்காரவள்ளைக் கீரையை தொடர்ந்து சமைத்து சாப்பிட்டால் உடல் பருமன் குறையும்.
இலவங்க பட்டையுடன் வேப்பிலை மற்றும் மிளகு ஆகியவற்றை சம அளவு எடுத்து அரைத்து அதிகாலையில் இரண்டு கிராம் அளவிற்கு சாப்பிடவும். இதன் மூலம் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் கரையும்.
ரோஜாப்பூ, வெள்ளை மிளகு, சுக்கு, ஆகியவற்றை தலா 50 கிராம் எடுத்துக் கொள்ளவும்.இதனை அரைத்து காலை மாலை இரு வேளையும் சாப்பிட்டு வந்தால் உடல் பருமன் குறையும்.
உலர்ந்த ரோஜா இதழ்கள், சுக்கு, ஏலக்காய் தலா 100கிராம் எடுத்து அரைத்துக் கொள்ளவும். தினமும் காலை மாலை இரு வேளையும் இரண்டு கிராம் அளவிற்கு சாப்பிட்டு வந்தால் இரத்த அழுத்தம் குறைவதுடன் கெட்ட கொழுப்புகள் கரையும்.
பாட்டி வைதியம் ஒரு அருமையான வைத்தியம் கண்டிப்பா எல்லாரும் முயற்சி செய்யுங்க.
Discussion about this post