அடுத்தடுத்த அப்டேட்களை வெளியிட்டு பயனர்களைக் கவர்ந்து வரும் வாட்ஸ் அப் நிறுவனம் தற்போது புதிய அப்டேட் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.
மெசேஜிங் சேவையில் முக்கிய அம்சமாகத் திகழும் வாட்ஸ் அப் நிறுவனம், iOSஇல் கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து தற்போது ஆண்ட்ராய்டிலும் ‘Swipe To Reply’ சேவையை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய வசதியால் வாட்ஸ் அப் பயனர்களின் ரிப்ளை செய்யும் முறை எளிதாகியுள்ளது. இந்த வசதியைப் பெற 2.18.300 என்ற வாட்ஸ் அப்பின் லேட்டஸ்ட் வெர்சனை பதிவிறக்கம் செய்து கொள்ளவேண்டும். கடந்த ஜூன் மாதம் வாட்ஸ் அப் நிறுவனம் ‘Swipe To Reply’ வசதியை ஆப்பிளின் iOS பயனர்களுக்கு அறிமுகம் செய்திருந்தது. அதற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து தற்போது ஆண்ட்ராய்டிற்கும் வழங்கப்பட்டுள்ளது.
முன்னதாக ரிப்ளை ஆப்ஷனை பயன்படுத்த குறிப்பிட்ட Text-ஐ Long press செய்து மேலே உள்ள reply ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டி இருந்தது. ஆனால் தற்போது வெளியாகியுள்ள புதிய அப்டேட்டில் Swipe செய்தாலே போதுமானதாகும். இது குறிப்பாக க்ரூப் மெசேஜ் செய்யும் பயனர்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும்.
இருட்டில் வெளிச்சமான திரையை நீண்ட நேரம் பார்ப்பதால் அதனைப் பயன்படுத்துவோருக்கு கண்களில் எரிச்சல் ஏற்படுவதாகப் புகார்கள் வந்ததையடுத்து இந்தப் பிரச்சினைக்கான தீர்வும் இந்த அப்டேட்டில் வெளியிடப்பட்டுள்ளது. இருட்டின் பின்னணியில் தெளிவான எழுத்துக்களைக் கொண்ட Dark Mode வசதி தற்போது இதில் புகுத்தப்பட்டுள்ளது.
Discussion about this post