எல்லா விதமான ஆற்றலையும் தரக்கூடிய உணவு வகையில் ஒன்றுதான் நாட்டுச் சர்க்கரை. மேலும் வெள்ளை சர்க்கரைக்கு மாற்றாக நாட்டுச் சர்க்கரை வந்துள்ளது. இதில் உள்ள நன்மைகள் ஏராளம். வெள்ளை சர்க்கரைக்கு பதிலாக நாட்டுச் சர்க்கரை பயன்படுத்தி வந்தால் உடல் பருமன் முதல் மாதவிடாய் வலி வரை அணைத்திற்கும் இது நன்மை தரும்.
மேலும் இவற்றில் குறைந்த கலோரிகளே உள்ளன. நாட்டுச் சர்க்கரையில் கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீசியம், ஜின்க், செலினியம், இரும்புச்சத்து போன்றவை உள்ளது. இதில் எந்தவித வேதி பொருட்களும் இல்லை. இதில் எண்ணற்ற தாது பொருட்கள், ஊட்டச்ச்த்துக்கள், வைட்டமின்கள் நிறைந்திருக்கின்றன.
பெண்களின் மாதவிடாய் நாட்களில் ஏற்ப்படும் வலி உண்மையில் மோசமானதுதான். இந்த வலியை போக்கும் மருந்தாகதான் நாட்டுச் சர்க்கரை செயல்படும். மேலும் கர்ப்பபைகளின் தசைகளை தளர்த்தி மாதவிடாய் வலிகளை குறைத்து விடும்.
மேலும் நாட்டுச் சர்க்கரை உடல் பருமனாக உள்ள பல பேருக்கு ஏற்றதாகும். பல பேர் அதிக உடல் எடையுடன் இருக்கிறேன் என கவலைப்படுகின்றனர். அப்படிப்பட்டவர்களுக்கான ஏற்ற உணவு வகைதான் நாட்டுச் சர்க்கரை. இதில் குறைவான கலோரி உள்ளது. எனவே இவற்றை பயன்படுத்தினால் உடல் எடை குறைய அதிகம் உதவும்.
கர்ப்பினிகளின் நலன் காப்பதற்கும் இந்த நாட்டுச் சர்க்கரை பெரிய அளவில் கை கொடுக்கிறது. இதனால் கர்ப்பினிகளின் உடல் நலம் பழைய நிலைக்கு திரும்ப நல்ல பலன் தருகிறது.
மேலும் மூச்சு திணறல் கோளறுகளுக்கு அருமையான தீர்வு. நாட்டுச் சர்க்கரையினால் ஆஸ்துமா போன்ற பிரச்சனைகளும் குணமடையும். வலிமையான உடல் கிடைக்கும்.
செரிமான பிரச்சனை உள்ளவர்கள் உணவில் நாட்டுச் சர்க்கரையை சேர்த்து கொண்டால் ஜீரண கோளாறுகள் குணமாகும். ஜீரண கோளாறுகள் ஏற்படும் போது நாட்டுச் சர்க்கரை மற்றும் இஞ்சி சேர்த்து கொதிக்கவிட்டு குடித்தால் சரியாகும்.
நாட்டுச் சர்க்கரையை சோர்வாக இருப்பவர்க்கு புத்துணர்வூட்டியாக செயல்படுகிறது. மேலும் சுறுசுறுப்பாக வைக்கிறது. பருவகாலங்களில் சளித் தொல்லைக்கும் உதவி செய்கிறது. நாட்டுச் சர்க்கரையை நீரில் போட்டு கொதிக்க வைத்து குடித்தால் சளித் தொல்லை நீங்கும். சருமத்தின் அழகிற்கும் நாட்டுச் சர்க்கரை பயன்படுகிறது.
நாட்டுச் சர்க்கரையை மட்டும் பயன்படுத்துங்க. வெள்ளை சர்க்கரையை பயன்படுத்தாதீங்க. நல்லதையே பின்பற்றுவோம். ஆரோக்கியமாக வாழ்வோம்.
Discussion about this post