பிஸ்தாவின் மருத்துவ குணங்கள்
பிஸ்தாவில் அதிக அளவில் பி6 உள்ளதால் இரத்தத்தில் ஹீமோகுளோபின் உற்ப்பத்திக்கு ம்கவும் அவசியமானது. அதோடு மட்டும் இல்லாமல் செல்களுக்கு ஆக்சிஜனை கொடுக்கிறது. விட்டமின் பி6 ஆனது மனிதனுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தருவது மட்டுமில்லாமல் வெள்ளை மற்றும் சிவப்பு இரத்த அனுக்களை உற்பத்தி செய்து மண்ணீரல் பராமரிப்பதில் மிக முக்கிய பங்கு வகிக்கின்றது. பிஸ்தாவில் விட்டமின் இ மிகுந்துள்ளதால் தோல் முதிர்ச்சி அடையாமலும், புற ஊதா கதிர்களால் தோல் பாதிக்காம்ல் இருக்கவும் மற்றும் தோல் புற்று நோய் வராமல் இருக்கவும் உதவுகின்றது.
ஏலக்காயின் மருத்துவ குணங்கள்
ஏலக்காய் பொடியாக்கி தேன் கலந்து சாப்பிட்டால் நரம்பின் பலம் கூடும். கண் பார்வை அதிகரிக்கும். ஏலக்காய் பொடி, ஜீரக பொடி, சோம்பு பொடி ஆகிய 3யும் 5 கிராம் வீதம் எடுத்து தேன் குழைத்து சாப்பிட்டால் பசி கூடும். ஜீரணம் அதிகரிக்கும். ஏலக்காய் பொடியாக்கி துளசிச்சாறுடன் கலந்து சாப்பிட்டால் வாந்தி நிற்கும். ஏலக்காய் 15, வால்மிளகு 15,மற்றும் 3 வெற்றிலை ஆகியவற்றை ½ லிட்டர் நீரில் கொதிக்க வைத்த பிறகு 3 வேளை வீதம் குடித்தால் வாந்தி குமட்டல் நிற்கும்.
முருங்கக்காய் மருத்துவ குணங்கள்
முருங்கக்காயின் சாறு எடுத்து பசும்பாலுடன் சாப்பிட்டு வந்தால் குழந்தைகளுக்கு எலும்பு பலப்படும். முருங்கக்காயை தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் இரத்தங்கள் சுத்தப்படும். கர்ப்பினி பெண்கள் கண்டிப்பாக முருங்க்காயை சாப்பிட வேண்டும். ஏனெனில் பிரசவத்திற்கு முன்பும் பிரசவத்திற்கு பின்பும் ஏற்ப்படகூடிய பிரச்சனைகளை முருங்கக்காய் நிக்குகிறது. முருங்கக்காய் சாப்பிடுவதன் மூலம் தாய்ப்பால் அதிகரிக்கும். முருங்கக்காயின் சாறு எடுத்து எலுமிச்சை சாறு கலந்து தடவி வர முகத்துக்கு மினுமினுப்பு கொடுக்கும்.
பாதாம் மருத்துவ குணங்கள்
தினமும் பாதாம் சாப்பிடுவதன் மூலம் இருதய நோய் வருவதை தடுக்கலாம். ஏனெனில் இதயத்தை பாதுகாக்கும் விட்டமின் இ அதிகமாக உள்ளது. தினமும் ஒரு கையளவு பாதாம் சாப்பிட்டால் கொலஸ்ட்ரால் குறைந்து நல்ல கொலஸ்ட்ராலின் அளவை சீராக வைக்க உதவும். நார்ச்சத்து அதிகம் இருப்பதினால் குடல் புற்று நோய் உண்டாகுவதை தடுக்கும். மெக்னீசியம் பாதாமில் அதிகம் இருப்பதால் இது உடல் முழுவதும் இரத்த ஓட்டம் சீராக பாய உதவியாக இருக்கும். கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் அதிகம் இருப்பதால் மூட்டு வலியை தடுக்கிறது.
இவ்வாரு பல அறியாத மருத்துவ குணங்களை பற்றி அறிந்தது மட்டும் இல்லாமல் அதனை பின்பற்றுவோம்.
Discussion about this post