35 வயது வரை பெரும்பாலோனோர் தங்கள் உணவில் கட்டுப்பாடு எதையும் வைத்துக் கொள்வதில்லை. ஆனால் அதற்கு மேல் சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதால் உணவுக் கட்டுப்பாட்டுடன் உடற்பயிற்சி உள்ளிட்ட சில கடமைகளை நீங்கள் கட்டாயம் செய்தாக வேண்டும். அது குறித்து பாப்போம் !!
நோய் வந்தபின் அதற்கான மருந்துகளை எடுத்துக் கொண்டு கஷ்டப்படுவதை விட, வருமுன் காப்போம் என்ற கொள்கையை நாம் கடைப்பிடித்தால் நோயில்லாத ஒரு வாழ்வை வாழலாம்.
பொதுவாக நாம் 35 வயது வரை உணவில் எந்தவொரு கட்டுப்பாடும் வைத்துக் கொள்ள தேவையில்லை.
ஆனால் 35 வயதை கடந்தவுடன் ஆண்டுக்கு ஒருமுறையாவது முழு உடல் பரிசோதனை செய்து கொள்வது அவசியம். முறையான உணவுப்பழக்க வழங்கங்களும், நல்ல சுகாதாரமான உணவுகளும், நாள்தோறும் நாம் செய்யும் உடற்பயிற்சிகளும் நோய் நம்மை அருகில் வராமல் தடுத்துவிடும்.
இது ஒரு புறம் இருந்தாலும் 35 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு நீரிழிவு நோய் வருவதற்கு அதிக வாய்ப்புள்ளது.
நாம் அன்றாடம் உண்ணும் அரிசியில் உள்ள அதிகமான மாவுச் சத்து 35 வயதிற்கு மேல் சர்க்கரை நோயை கொண்டு வந்துவிடும்.
அதனால் ஸ்டார்ச் சத்து குறைவாக உள்ள கோதுமையை அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்வது அவசியம்.
மேலும் கேழ்வரகு, வரகு, சாமை உள்ளிட்ட சிறுதானிய உணவு வகைகளையும் எடுத்துக் கொள்ளலாம், வெல்லம் அல்லது நாட்டு சர்க்கரை சேர்த்து கொள்வதும் நல்லது, நெய்யை உணவில் சேர்த்துக் கொள்ளக்கூடாது.
தினமும் காலையில் எழுந்தவுடன் 2 டம்ளர் தண்ணீர் குடிப்பது நீரிழிவு நோய் தவிர மற்ற நோய்களிலிருந்தும் நம்மை காப்பாற்றும்.
அத்துடன்ஊற வைத்த வெந்தயத்தை தினமும் வெறும் வயிற்றில் இரண்டு ஸ்பூன் அளவு சாப்பிட்டு வரலாம்.
அதே நேரத்தில் வேப்பிலைக் கொழுந்தை தினமும் சாப்பிட்டு வந்தாலும் ஆரம்ப நிலையிலுள்ள சர்க்கரை நோய் குணமாகும். ஒருவேளை சர்க்கரை நோய் ஆரம்ப நிலையில் இருந்தால் ஒரு டம்ளர் அருகம்புல் சாறு அருந்துவது நல்ல பலனை கொடுக்கும்.
மேலும் சர்க்கரை நோய் பெற்றோர்களின் உயிரணுக்கள் மூலம் நமக்கும் வர வாய்ப்புள்ளதால், அவர்கள் மிகுந்த ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
Discussion about this post